27 ஜூன், 2012

அஜீத் புதிய படமும் பில்லா 2 ம்...
அஜித்தின், பில்லா-2 சூட்டிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதால் ரிலீஸ்க்கான பரபரப்பு ஆரம்பமாகி இருக்கிறது.
பில்லா 2 தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக உலகளவில் 1200 திரையில் திரையிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பில்லா 2 படத்தில் ஆறாவதாக ஒரு பாடல் இருக்கிறதாம்.

அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி இருக்கிறது. தூத்துக்குடியில் சாதாரண டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக உருவாகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்ட்டி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி சூட்டிங் அனைத்தும் ரஷ்யா, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து விட்டதால், இப்போது ரிலீஸ்க்கான பரபரப்பு துவங்கி இருக்கிறது.

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதற்கு பில்லா-2 படத்தின் மிரட்டலான படக்காட்சிகளே சான்று.


 பில்லா 2 படம் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள பில்லா 2 படம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சென்சாருக்கு போன இடத்தில் பல இடங்களில் கை வைக்கப்பட்டது. மேலும் 'ஏ' சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போகிறது. ஜூன் 22ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கார்த்தியின் சகுனி அதே நாளி்ல் ரிலீஸானதால் படத்தின் வியாபாரத்தை கணக்கில் கொண்டு ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 29ம் தேதியும் படம் ரிலீஸ் இல்லையாம். மாறாக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமையன்று படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

ஜூலை 13லாவது ரிலீஸ் செய்துவிடுவார்களா என்று அஜீத் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.


அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் விஷ்ணுவர்தன் படத்தை பற்றிய செய்திகள் ரசிகர்களை பரபரப்பாக்குகின்றன. விஷ்ணுவர்தன் இந்த படத்தை துவங்கும் போதே ஆர்யா, நயன்தாரா என பல முக்கிய நடிகர்களை படத்தில் சேர்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பல விபத்துகளில் சிக்கி தனது உடலில் பல அறுவை சிகிச்சைகளை செய்துள்ள அஜித்துக்கு மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறை கூறியுள்ளனர். ஆனால் அஜித் தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து ரிஸ்கான காட்சிகளில் நடித்துவருகிறார்.

விஷ்ணுவர்தன் படத்திற்காக அஜித் கடந்த ஏழு நாட்களாக தினமும் ஐந்தரை மணிநேரம் உடற்பயிற்சி செய்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பு இருக்க வேண்டுமென்பதற்காக கவனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார் அஜித்.

அஜித் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் அவரை மேலும் ஸ்டைலாக காட்ட வேண்டும் என்பதற்காக பிரத்யேகமான ஏற்பாடுகளை விஷ்ணுவர்தன் செய்திருக்கிறாராம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக