23 ஜூன், 2012

குப்பையில் சுக்குநூறாகக் கிடந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள்! திருச்சி மக்கள் அதிர்ச்சி!










திருச்சி உறையூரில் இன்று (23.06.2012) காலை குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பையை எடுத்து அப்புறப் படுத்தச் சென்ற துப்புரவுப் பணியாளருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

வெறும் பிளாஸ்டிக், பேப்பர் குப்பைகளை அகற்றுவதற்காக வழக்கம் போல் எதிர்பார்த்துச் சென்றவர், அங்கே ரூபாய் நோட்டுகள் சுக்கல் சுக்கலாகக் கிழிக்கப்பட்டு பரவிக் கிடந்ததைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அந்த நோட்டுகள் எதுவுமே எடுத்து ஒட்டி பயன்படுத்த இயலாத நிலையில் சிதைக்கப்பட்டிருந்தன.

பணியாளர் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தந்தார். அதற்குள் பொதுமக்களுக்கு இந்தத் தகவல் பரவியது. கூட்டம்கூட்டமாக குப்பைத் தொட்டியைப் பார்வையிட பொதுமக்கள் திரண்டனர். அதிகாரிகள் அதற்குள் அந்த இடத்துக்கு வந்து கிழிசல் நோட்டுகளைக் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் என்பது தெரியவந்தது. இவை எப்படி இங்கு வந்தன, இவற்றின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 5 கிராம், 500 ரூபாய் நோட்டுகள் 550 கிராம், 100 ரூபாய் நோட்டுகள் 569 கிராம், 50 ரூபாய் நோட்டு 20 கிராம் என மொத்தம் 1103 கிராம் உள்ளதாகவும், சுமார் 50 ஆயிரம் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடபாவிகளா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக