29 ஜூன், 2012

சீருடை அணியாததால் வகுப்பறையில் மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை:

கொல்கத்தா, ஜூன். 29-
சீருடை அணியாததால்
 வகுப்பறையில் மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை: விசாரணைக்கு உத்தரவு 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கைகட்டா என்ற ஊரில் பெரிகோபால்பூர் ஆதர்ஷா உயர்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இங்கு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூன்று பேர் சீருடை அணியாமல் வகுப்புக்கு வந்தனர். மற்ற ஆசிரியைகள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பாடம் நடத்தி விட்டு சென்றனர்.

ஆனால் புவியியல் ஆசிரியை பிபாஷா தாக்கூர், சீருடை அணியாத மாணவிகள் 3 பேரையும் வகுப்பறையில் இருந்து வெளியேற்றினார். அவர்களில் ஒரு மாணவி தான் இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்தேன். எனவே இன்று எந்த சீருடை என்று தெரியாததால் சாதாரண உடையில் வந்தேன். இனி முறையான சீருடை அணிந்து வருகிறேன் என்று விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கம் ஆசிரியை பிபாஷா தாக்கூருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த மாணவியை மட்டும் வகுப்பறைக்குள் அழைத்தார். அந்த பள்ளி இருபாலரும் பயிலும் பள்ளி ஆகும். சக மாணவ-மாணவிகள் முன்பு அந்த மாணவியின் கால் சட்டையை கிழித்து எறிந்தார். மேல் சட்டையுடன் அரை நிர்வாண நிலையில், வகுப்பு முடியும் வரை அங்கேயே அந்த மாணவியை நிற்க வைத்தார்.

பள்ளி முடிந்த உடன் அரை நிர்வாண நிலையிலேயே அழுதபடி அந்த மாணவி வீட்டுக்குச் சென்றாள். நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் விளக்கினாள். அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த தகவல் மற்ற மாணவிகளின் பெற்றோருக்கும் தெரிய வரவே அனைவரும் சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியையை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களை பள்ளி நிர்வாகம் சமாதானம் செய்து அனுப்பி வைத்தது.

இந்த விவகாரம் மாநில கல்வி அலுவலகம் வரை சென்றதால் இது பற்றி விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு கல்வி மந்திரி பிரத்யா பாசு உத்தரவிட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


நேற்று ஹைத்தராபாத் இருக்கும் ஒரு பள்ளியில் பேசியதற்கு 
வாயில் டேப் ஒட்டி வாயாடி என்று கூறி வெளியே நிற்க வைத்த 
சம்பவம்..அடுத்து இன்று இதுபோல்...

இது என்ன கொடுமை...
ஆசிரியர்கள் முன்மாதிரியாய் இருக்காமல் இபப்டி இருந்தால்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக