27 ஜூன், 2012

'விஸ்வரூபம்'கதையின் ஓட்டம்...



 



இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்க, கமல் இயக்கி வருகிறார். ஷங்கர்-இஷான்-லாய் இசையமைத்து வருகிறார்கள்.

'விஸ்வரூபம்' ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. இதுவரை கமல் நடித்த படங்கள் எல்லாவற்றையும் விட அதிக பொருட்செலவில் தயாராகும் படம் 'விஸ்வரூபம்'.

'விஸ்வரூபம்' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் LEE WHITTAKER. இவர் மைக்கேல் பே இயக்கிய 'PEARL HARBOUR' படத்திற்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தவர். அர்னால்ட், ஜார்ஜ் க்ளூனி, ப்ரூஸ் வில்லிஸ் போன்றோருடன் பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றும் முதல் இந்திய திரைப்படம் இது தான்.

முதலில் இப்படத்தில் பணியாற்ற படக்குழு LEE WHITTAKER-ரிடம் கேட்ட போது, முடியாது என்று தவிர்த்து விட்டாராம். பின்னர் கமல் நடித்த படங்களில் இருந்து சண்டைகாட்சிகளை போட்டு காண்பித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் கமலின் ஈடுபாட்டை பார்த்ததும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கமல் மற்றும் ராகுல் போஸ் இருவரும் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை வடிவமைத்து வருகிறார் LEE WHITTAKER.கமல் ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் எல்லாம் டூப் இல்லாமல் தானாகவே நடித்து கொண்டு இருக்கிறார். கமலுக்கு சினிமாவின் மீதுள்ள ஈடுபாட்டைக் கண்டு அசந்து போனாராம் லீ.

சண்டைக்காட்சியில் கமலின் விஸ்வரூபத்தை பார்த்து மெய் சிலிர்த்து நிற்கிறதாம் படக்குழு.இப்படி ஒரு போக்குடன் போகும் இந்த படத்துக்கு

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.

இந்து மக்கள் கட்சதியின் தலைவரான கண்ணன் இதுதொடர்பாக சர்ச்சையை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்?

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.

நன்றி யாழ்


முன்பு மும்பை எக்ஸ்பிராஸ்,அடுத்து சண்டியர் ,விரும்பான்டியாய் மாறியதும் இப்ப இதுக்குமா ?ஹாஹா...

அடுத்து இப்படிதான் கதை என்று...ஒரு முன்னோட்டம்...அட நான் சொல்லவில்லை வந்த செய்திதாங்க 


அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்கத் தமிழ்ப் பெண், காதலின்றி கடிமணம் புரிகிறாள்.

விஸ் என்கிற விஸ்வநாதனுக்கும், நிரு என்கிற நிருபமாவிற்கும் திருமணம் நடந்தேறி 3 வருட காதல் ஊடல் கூடலின்றி இல்லறம் நடத்தி, பி.எச்.டி.யும் முடித்து வேலைக்கும் செல்கிறாள் டாக்டர். நிருபமா விஸ்வநாத். விஸ்வநாத்திற்கும் இந்த ஏற்பாடு சௌகரியமாக இருக்கிறது. தனது கதக் நடனப் பள்ளியை சம்சார இடைஞ்சல்களின்றி நளினமாக நடத்தி வருகிறார் விஸ்வநாத், எனினும் ஆசை யாரை விட்டு வைத்தது. டாக்டர் நிருபமா வேறு புதுக்கனவுகள் காணத்துவங்குகிறாள். அப்போது படிப்புக்காக போட்டுக் கொண்ட கால்கட்டு இடறுகிறது. தன் திருமணத்தில் திரு தன்மை குறைவாக உள்ளதை உணர்ந்து நிருபமா அந்த திருமணத்தை துறக்க விரும்புகிறாள்.

மணமுறிவிற்கு என்ன காரணம் சொல்லுவதெனக் குழம்புகிறாள். குறை சொல்லக் காரணங்களே இல்லாத விஸ்வநாதின் ஒழுக்கத்தில் ஏதாவது களங்கம் இல்லாமலா போய்விடும்? என்ற நம்பிக்கையில் விஸ்வநாத்திடம் ஏதாவது ஒழுக்கக்கேடுகள் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள் டாக்டர். நிருபமா.

கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது.எழுதி, இயக்கி, தயாரித்தவர் கமல்ஹாசன்.

கதை இப்படிதானா ?இல்லை இது வழக்கம் போல விடும்  விஸ்வரூபம் கதையா...படம் வந்தால் தான் தெரியும்....

1 கருத்து: