மருத்துவமனையில் விஜய் :தள்ளுமுள்ளு -
நடிகர் விஜய் பிறந்த நாள் விழா இன்று ( 22.6.2012) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு விஜய் சென்றார். அங்கு இன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவித்தார்.
இதே ஆஸ்பத்திரியில்தான் விஜய் பிறந்தார் என்பதால் அவரே நேரில் வந்து மோதிரம் அணிவித்தார்.
காலை 10.30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 11 மணிக்கு மேல்தான் விஜய் மருத்துவமனைக்கு வந்தார்.
அவரின் வருகைக்காக பொதுமக்களுடன் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் காத்தி ருந்தனர். மருத்துவர்களூம், மருத்துவமனை ஊழியர்களூம் வேலையை கவனிக்காமல் விஜய்யின் வருகைக்காக காத்திருந்ததால் சிகிச்சைக்காகவந்திருந்தவர்கள் அவதியுற்றனர்.
பிரசவம் ஆன தாய்மார்கள் வலியில் படுத்திருந்தார்கள். அவர்களை விஜய் வருகிறார் என்று கூறி படுக்க விடாமல் 1 மணி நேரமாக உட்காரவைத்திருந்தனர். பிரசவம் ஆகி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்ணை, விஜய் அங்கே வருகிறார் இங்கே வருகிறார் என்று ஸ்டெச்சரில் வைத்தே அங்கெ இங்கே நெடு நேரத்திற்கு அலையவிட்டனர்.
விஜய் வந்ததும் பொதுமக்களாலும், ஊழியர்களாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. இதனால் போலீசாருக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டன.
http://www.nakkheeran.in/Users/frmGalleryList.aspx?GV=1317&GSS=4
படங்கள் : ஸ்டாலின்
நன்றி நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக