24 ஜூன், 2012

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

இளையதளபதி விஜய் நடித்த நண்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கப்போகும் புதிய படங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவர் இயக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கும் அந்த படத்திற்கு ஐ என தலைப்பிடப்பட்டுள்ளது.

வெற்றிப்பட தயாரிப்பாளர் ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதல்முறையாக ஷங்கருடன் இணைகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சமந்தாவும், முக்கிய வேடத்தில் மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபி, சிவாஜி கணேசனின் மூத்த மகனும் நடிகர் பிரபுவின் அண்ணனுமான ஜி.ராம்குமார், சந்தானம் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ என்பதற்கு அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை, எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளன. இவற்றின் கலவையாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜுலை 15ல் சென்னையில் தொடங்க உள்ளது. சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவை சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள். இந்த ரொமான்ட்டிக் த்ரில்லர் படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Director Shankars next film titled as I
ஷங்கரின் கைவண்ணம் இது வரை தோற்றது இல்லை boys உட்பட 
படம் வெற்றி அடைய வாழ்த்துவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக