30 ஜூன், 2012

மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு சிங்களர் கட்சி கடிதம்


தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு சிங்களர் கட்சி கடிதம்

கொழும்பு, ஜூன்.30-

தி.மு.க. சார்பில் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி “டெசோ” மாநாடு விழுப்புரத்தில் நடக்கிறது. இதுதொடர்பாக இலங்கையில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜே.எச்.யூ. (ஜதீகா ஹீலா உருமையா) கட்சி தலைவர் ஒமல்பெ ஷோபிதா தெரோ பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க. நடத்த உள்ள “டெசோ” அமைப்பின் மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் சுதந்திரமான தனி ஈழம் கோரிக்கை விடுப்பதன் மூலம் அது இலங்கையில் இறையாண்மைக்கும், ஒரு மைப்பாட்டுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும்.

மேலும் தனிஈழம் கோரிக்கையின் மூலம் இறுதிகட்ட போருக்கு பின்பு உருவான நல்லெண்ணம், நல்லுறவு போன்றவை அழிந்து மீண்டும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

1976-ம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த தனிஈழம் தீர்மானத்தினால் இலங்கையில் 30 ஆண்டுகளாக தீவிரவாதமும், போரும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் இந்தியாவுக்குள் எதிர்ப்பு சக்திகள் ஊடுருவ இலங்கை ஒருபோதும் அனுமதித்த தில்லை என்பதை தங்களுக்கு (மன்மோகன்சிங்குக்கு) நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் எதிர்காலத்திலும் அந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக