ஸ்ரீகாகுளம், ஜூன் 30-
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நாகர்ஜூனா ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டது. தீ தொடர்ந்து எரிந்த நிலையில் 5வது மாடியில் இருந்த ரசாயன கலவை சாதனங்கள் வெடித்து சிதறின.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 வண்டிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்வம் நடந்த இந்த தொழிற்சாலையில் 200 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை தொழிற்சாலையில் பணியில் இருந்த 17 பேர் மட்டுமே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. முதல் கட்ட தகவல்களின்படி சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது என ஸ்ரீகாகுளம் துணை போலீஸ் அதிகாரி அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த முழு தகவல்கள் கிடைக்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக இந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அப்பகுதி கலெக்டர் ஜி. வெங்கட்ராம் ரெட்டி, துணை கலெக்டர் பி. பாஸ்கர் மற்றும் சில உயர் அதிகாரிகள் ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக