30 ஏப்., 2012

மே தின நல் வாழ்த்துக்கள்...


வாழ்க்கை கதவுகள் 
திறக்க உழைப்பு 
உறுதுணை செய்கிறது...

சிரிக்கவும், சிறக்கவும் 
உழைக்க தெரிந்தவனால் 
மட்டுமே முடியும்...

சர்வதேச தினமாய் 
எல்லோருக்கும் பொதுவானது
உழைப்பார்கள் தினமே...

ஒவ்வொரு வருடமும் 
உலகமே ஒரு வட்டத்தில் 
மே முதல் நாளில்...

உழைத்தவனுக்கு 
ஓய்வு எடுக்கு 
அறைக்கூவல் விட்ட நாள்...

இந்த நாளில் இன்னும் 
உழைப்பாளர்கள் உயர 
வாழ்த்துவோம்...!

உறவுகளுக்கும் 
உழைப்பாளிகளுக்கும் 
மே தின நல் வாழ்த்துக்கள் 

பெயர் சூட்டும் வைபோகம்...





தலைவர் ஏன் இன்னும் நம்ம கட்சிக்கு பெயர் வைக்கவில்லை ?

கட்சி தொடங்கிய நாற்பதாம்  நாள் தான் பெயர் சூட்டும்
வைபோகம் என சொல்லிவிட்டார் ...
=================================


தலைவருக்கு வாயிலே சனி போல 


அப்படி என்ன தான் சொன்னார் ?


எப்போது பேசினாலும் சனிக்கிழமைக்கு 
பின் அல்லது முன் என்றே சொல்லுகிறார்...
======================================


அம்மாவாசை

தன்னைத்  தானே சுற்றி 
நிலவை பறிக்கொடுத்தது
பூமி...!
=======================
காகத்தை நினைத்து 
மனிதர்களை மறந்தனர் 
வள்ளல்கள்...
=======================
மகிழ்ச்சியை தேடி 
இருப்பதையும் இழந்தனர் 
குடி மக்கள்...
========================


29 ஏப்., 2012

பேருந்து பயணம் !



கூட்டத்தோடு .
சேர்த்துக்கொள்ளும் 
காலை நேர 
அரசு பேருந்து !


வேர்வை நாற்றம்
அழுக்கு உடல்
வாராத தலை
திருப்பித் தராத 
சில்லறை பாக்கி ....


காமுகனின் சிற்றின்பம் 
திருடர்களின் கைவரிசை
குழந்தையின் அழுகை


குமரியின் அழகு
கொடுக்க வந்தும் 
கொடுக்கப்படாத 
காதல் கடிதம்...


வேலைக்காக சிலர்
வேதனையோடு சிலர்
வேடிக்கைப்பார்த்தவண்ணம் சிலர்
காதல் வாகனமாய் சிலரும்..


பேருந்து பயணம் 
நமக்கு தொடர்கதை..
எல்லாவற்றையும்
மறந்த பயணம்
வாழ்கையின் ஒரு அங்கம் !


வெற்றியின் இலக்கையடைய
மனதுக்குள் ஆயிரம் 
வந்து போனாலும்...


நம்மோடு கடந்து போனாலும்
நினைக்கும் தூரத்தை கடக்க 
வாழ்ந்து பார்க்க 
பல நிலைகளை கடக்க 
நீ நடக்க வேண்டும் ...


வாழ்க்கை உனக்குள்ளிருக்க
தடைகளை கடந்து
தேடலை மறந்து...


இருப்பதைக்கொண்டு 
வாழ்ந்துபார் !
வாழ்க்கை உனது கையில்!


27 ஏப்., 2012

இன்றைய வாக்காளன்!


கொள்கை ஏதுமில்லாமல்
மாற்றங்கள் வேண்டி
தடுமாற்றமில்லாமல்...

ஒவ்வாரு தேர்தலுக்கும் 
தெரிந்தே 
கவர்ச்சிக்கும்
பேச்சிற்க்கும்
சாதிக்கும் 
புதிய கட்சிகளுக்கும் 
வாக்களித்தான்...

25 ஏப்., 2012

பாலம்...





















பலம் பெற
ஒரு அணியில் திரள 
வழியில் வந்தவன் 
தலைவனாகிப் போக...

கொள்கையோடு வந்தவன் 
பாலமாகிப்போனான்...!





23 ஏப்., 2012

கட்சி உத்தரவாம்....சிரிக்க மட்டும்,

அமைச்சர்கள்  ஏன் வெளியே போகும்போது எல்லாம் தலையில் 
துண்டை போட்டு அலைகிறார்..?

எதிர் கட்சி சின்னத்தை பார்க்காமல் போகணும் என்று அவங்க கட்சி 
உத்தரவாம்....
=============================================

ஏன் தலைவர் தூங்கும் போது தலையணை வைக்காமல் 
டிக் ஷனரி வைத்து தூங்கிறார் ?

அர்த்தமில்லா கனவுக்கு அர்த்தம் காண தான் ...

=============================================

22 ஏப்., 2012

செயல் முறை விளக்கத்துடன் ...சிரிக்க மட்டும்


வாத்தியார்:

டேய் பள்ளிக்கூடத்தில் ஏன்டா தூங்கிறே?

மாணவன்:

நீங்க தான் தூக்கம் நமக்கு முக்கியம் என்று சொன்னீர்கள்,அதை செயல் முறை விளக்கத்துடன் செய்து பார்த்தேன்  சார்...

வாத்தியார்:

 என்ன கொடுமைஎன்ன கொடுமைஎன்ன கொடுமைஎன்ன கொடுமை

===============================================
தலைவர்:

நம்ம கட்சி வளர யோசனை சொல்லுங்க...

தொண்டன்:

நீங்கள் பேசாமல் இருந்தாலே போதும் தலைவா...

தலைவர்:

மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்
=================================================

சட்டம்...


எழுத்தறிவு அறிய 
எழுதும் கரும்பலகையில் 
கூடா இருக்கிறது 
சட்டம்...

வட்டம்,மாவட்டம் 
என்று போகும் 
அரசியல்வாதி  போடும் 
திட்டத்திற்கு
சட்டம் சாயம் 
போன நிலையில்...


தாதாக்களோ 
சட்டத்தை வளைக்க 
வாய்தாக்கள்
வாங்கும் நிலை...

சட்டம் சாமானியனுக்கு 
சாபம்...
சகலமும் அறிந்தவனுக்கு
சட்டம் தன் கடமையை
செய்யும்...

21 ஏப்., 2012

இவ்வுலகம்...



இல்லறம் நல்லறமானது
இரு உள்ளங்கள்
இணைத்த இல்வாழ்க்கையில்...


இரவுகளும் பகலாய் போனது
இன்பங்கள் படை சூழ 
இணைந்தன உடல்கள்...


இருவரின் நெருக்கம்
இணைப்பெருக்கம் தந்தது 
இருவர் மூவராய் போக...


இறைவன் தந்த இல்வாழ்க்கை
இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால்
இவ்வுலகம் சொர்க்கமாகும்...

நடிகர்கள் சுயநலமே...ஒரு பார்வை...


சினிமா அரசியல் உலக ஆயுதம்...அரசியல் வாழ்கையை முன்னிறுத்தி திரைவுலக வாழ்கையை தொடரும் நடிகர்கள் இன்றுமுண்டு...

இதே அரசியல் வாழ்க்கை வலித்தந்து, மறைந்த நடிகர்களும்,ஒதிங்கிய நடிகர்களுமுண்டு...

நடிகர்கள் மட்டுமா என்றால் இல்லை இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும்,
தங்களை ஒரு அரசியல்வாதிகளாய்,அரசியல் அபிமானிகளாய் தங்களை  அடையாளம் காட்டியவர்கள் இன்றுமுண்டு....!

இடையிடையே,போட்டிகள்,பொறாமைகள் ஏற்பபட்டு ஆட்சி மாற்றத்தால்,
தன்னை மாற்றி,தனது எண்ணத்தை வெற்றி பெற, வண்ணத்தை மாற்றும் 
நபர்கள் உள்ளார்கள்...

இவர்களால் சினமா வாழ்கிறதா?,இல்லை சினமா இவர்களை வாழ வைக்கிறதா?

சினமா இவர்களுக்கு ஒரு ஆயுதம்!இதை வைத்து இவர்கள் ஆடும் ஆட்டமே இன்றைய நிலை...

இதனால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் அடிப்படை வசதிக்கூட இல்லாத ஊழியர்கள்...உதவி இயக்குனர்கள் தான் அடுத்து அழிந்து வரும் சினிமா உலகம் தான்...

இதன் போட்டியால் இந்த சினிமா உலகம் அழிந்து வருகிறது...
திரையரங்கம் சென்று படம் பார்க்கும் நிலை குறைந்து வரும் நிலை நாம் அறிந்த ஒன்று தான்...

வெளியாகும் புதுப் படத்துக்கு உண்டான கட்டணம், சராசரி மனிதன் டிகேட் வாங்கி பார்க்கும் நிலை இல்லை எனபது உண்மை...

காரணம் பெரிய நடிகர்கள் சம்பளம் ஒரு பக்கம்,விளம்பரம் ஒரு பக்கம்
திருட்டு சீடி என்று பயமுறுத்தும் நிலையால் சினிமா அழியும் நிலை...

யாரும் இன்றைய நிலையில் இது பற்றி கவலை படுவதில்லை   என்பதே உண்மை...

தனது படம் ஓடனும் எப்படி ஓட்டனும் என்று நினைக்கும் நடிகர்கள் சுயநலமே காரணம்...

தலைக்கு தலை நாட்டமை தான் காரணம்...
மாறுமா,மாற்றம் வருமா என்ற கேள்வியோடு...

மந்திரம்...



இன்றைய உலகத்தின் 
கையணை தந்திரம்...


மனதை
நமது தரத்தை 
மாற்றும் சூத்திரம்..


குறுஞ் செய்திகள்
எழுதும்..

நவீன காலத்தின் 
புது இலக்கணம்..



இளசுகளின் 
இதழ்களில் 
கைபேசி என்னும்  
மந்திரம்...

20 ஏப்., 2012

மந்திரக்கோல்!




வலைவுலகத்தில்
நிறுத்தி 
உலகத்தை சுருக்கி 
வசப்படுத்தும் 
மந்திரக்கோல்!

பஞ்ச் டயலாக்...1


நான் பார்த்தால் தான் புலி 
நீ பார்த்தாலோ  நான் எலி

இப்படிக்கு 
கதாநாயகர்கள் 
========================
நான் எப்ப வருவேன் 
எப்ப போவேன்  என்று எனக்கே தெரியாது

இப்படிக்கு  
மின்சாரம் 
========================
ஆண்டவன் எழுதிய தப்பான முதல் எழுத்து 
நான் தான் தலைவன்  உங்கள் தலை எழுத்து

இப்படிக்கு 
புது அரசில்வாதி
==========================
நான் ஒரு தடவை குளித்தால் 
நூறு வருஷம் குளிக்க மாட்டேன் 

இப்படிக்கு
தண்ணியில்லாக் காட்டியில் வாழும் மனிதன்
============================

தொ(ல் )லைக் காட்சியாய்



நாடகமே உலகமாய்
நடமாடும் செய்திகளாய் 
இல்லத்தோடு இணைத்திருக்க...


நேரமும் காலமும்...
நிகழ்ச்சிகளின்  தலைப்பை 
சொல்லிக்காட்ட...



கிராமத்திலும் இதன் ஆதிக்கம்
குடைப்பிடித்து காவல்காக்கும் 
டிஷ் கிளை மரங்களாய்
முளைத்திருக்க...

இன்றோ


சிரிக்க...
ரசிக்க...
அறிவோடு 
அழுகையையும் 
அணைத்துக்கொள்ள...



சின்னத்திரையின் மோகம் 
வீட்டுக்கு வீடு
தொ(ல் )லைக் காட்சியாய்
விசுபரூபம்...


19 ஏப்., 2012

செருப்பால் அடித்ததால்...சிரிக்க மட்டும்,


போலீஸ்:
இந்த திருட்டில்  யாருடா அந்த புதுக்கூட்டாளி ?

கபாலி:
திருட்டுக்கு திருட்டு கூட்டணி மாறும் ஐயா...

===========================================
அப்பா:

அடி செருப்பாலே..இந்த வயதில் காதலா ?

மகன்:

செருப்பால் அடித்ததால் தான் காதல் வந்தது அப்பா..
---------------------------------------------------------------------------------

பயமறியவில்லை




ஏமாற்றமே வாழ்க்கையாய்
வந்துபோனால் 
எதிர்ப்பார்ப்புக்கு 
எங்கு   வேலை...

பயமறியவில்லை 
பயணிக்க...
வறுமை என்னுடன்,
இருக்கும் போது.



18 ஏப்., 2012

இலவச காது குத்து...சிரிக்க மட்டும்,


அனைவருக்கும் நமது இலவச மகளிர் கட்சி வரும் 
தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச காது குத்து,
காதணி, மகளிர் அணி சார்பில் 
நடத்தப்படும்...

இதுவரை தேர்தல் என்றால் காது மட்டும் குத்திய 
கட்சிகளின் மத்தில் நாம் தான் இலவச காது குத்து,
காதணி, தருகிறோம்...

..............................................................................
வெற்றிக்கு பின் காது இலவசமா குத்தப்படுமா?


நமது கட்சி வெற்றியை வித்தியாசமா கொண்டாட 
நம்ம  தலைவி இப்படி முடிவு எடுத்து உள்ளார்கள்...

நமக்கு ஓட்டு போட்டதற்கு இது தான் சரி....
==============================================

ஏக்கம்!



கொடிக்கம்பத்தில் கொடி
சன்னலில் துணி,
நிர்வாணமான சிறுவன்.
=====================
மலர்களை சூடியவண்ணம்
மண மாலையை தேடி 
முதிர்க் கன்னி
=======================

17 ஏப்., 2012

கட்சி குறிப்பிலிருந்து...சிரிக்க மட்டும்,

என்ன பேசுபவர் அமைச்சரை முன்னாள் அமைச்சர் என்று சொல்லுகிறார் 

இப்பதான் செய்தி வந்ததாம் , நம்ம அமைச்சரை அமைச்சரவை லிருந்து தூக்கிவிட்டார்களாம்....!

அழுகைஅழுகைஅழுகை
===================================================
தலைவர், ஊழல்வாதிகளுக்கு கட்சியில் இடமில்லை என்று சொன்னதற்கு 
எப்ப உங்கள் இடம் காலியாகும் என்று தலைவரை பார்த்து கேட்க...

அப்பறம் என்ன ஆச்சி?

அந்த சொல்லை  கட்சி குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்...
----------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------

முதியோர் இல்லம் எதற்கு?


முதுமையே இது தான் 
உன் நிலையா ?

உனது இறப்புக்கு 
முன் நீ காணும் விதியா ?

விடியலை தந்தவர்களுக்கு 
இது தான் விடையா ?

இருந்த இடத்துக்கு
இது தான் கைமாறா?

இல்லத்தில் இல்லை இடமா
இல்லை...

இருப்பதில் இருக்க,கொடுக்க 
மறுக்கும் எண்ணமா?

பிள்ளைகளே!
நீங்கள்  வகுத்த குணமா ?
கிடைக்கும் நேரத்தில் 
பேச மறுக்கும் மனமா?

இது அடுக்குமா
இந்த பருவம் 
உனக்கும் வரும் என்று 
நினைத்து பார்க்குமா ?

பெற்றோகள் உன்னோடு 
இருந்தால் நன்மைகள் உனக்கு...

விடைகள் உனக்குள் இருக்கு.
முதியோர் இல்லம் எதற்கு?



16 ஏப்., 2012

போன புத்தாண்டுக்கு...சிரிக்க மட்டும்,




மாப்பிளைக்கு என்ன போடுவீங்க என்று 
கேட்டது தப்பா போச்சு...


ஏன் ?


வரதட்சணை  கேட்டால் கேஸ் போடுவோம் என்று 
டக்கு என்று சொல்லுறாங்க....
========================================
இந்த புத்தாண்டுக்கு 
பொண்ணு மாப்பிளை உங்க வீட்டுக்கு வந்துள்ளார்களா ?


அட நீங்க ஒன்னு, போன புத்தாண்டுக்கு வந்தவர்கள் 
இன்னும் போக மனமில்லாமல் உள்ளார்கள்...





விடியல் வேண்டி நடத்தும்...




















விடுதலை நோக்கிய பயணம்
விபரீதம் அறிந்த போதும்
விடியல் வேண்டி நடத்தும்...


மானம் காக்க போராட்டம் 
மரணம் கூட விரும்பும்
மனங்கள் கொண்ட இனம்


வாழ்க்கை முழுதும் துயரம்
இருந்தும் உரக்க சொல்லும்
வானம் தொடும் தூரம்.


விரும்பி ஏற்கும் குணம் 
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம்
விடுதலை ஒன்றே மந்திரம்


எண்ணிய எண்ணம் நடக்க 
விடுதலை நோக்கிய பயணம்
விடியல் வேண்டி நடத்தும்...


இறந்த உறவுகள் எல்லாம் 
விதைகளாய் மாறியது என்றும்
மீண்டும் முளைக்கும்,தழைக்கும்
எங்களுக்கு பிள்ளைகளாய் பிறக்கும்...




15 ஏப்., 2012

விண்ணப்பித்தால்...






























வலிமைமிக்க 
இரு கைகள் இணைந்தால் 
இணைத்தால்...


நினைத்ததை முடிக்கலாம்
நினைப்பதை நடத்திக்காட்டலாம்.


விருப்பமுள்ளவர்கள் 
விண்ணப்பித்தால்
அப்துல் கலாமாய்
மாறலாம்...


புதிய 
களம் காணலாம்
வினைத்தொடலாம்...


தொட்டதை எல்லாம் 
வெற்றியாக்கலாம்.
இந்த வெற்றி  உணர்வாய் 
இணைந்த கைகளாய்
மனித நேயம் 
உன்னுடன் இருந்தால்...!



சிமென்ட் போடவா...சிரிக்க மட்டும்,


வாடிக்கையாளர்:

ஸ்ட்ராங்க காபி போடுங்க 

டீ மாஸ்டர்:

அப்ப சிமென்ட் போடவா...

வாடிக்கையாளர்:
அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.
======================================

சச்சின் 

வாங்க வடிவேலு  டீ ஒன்னு போடவா ?

வடிவேலு 

இது கிரிகெட் இல்லே...
டீ,போடபுடாது என சொல்லக்கூடாது 
டீ கொடுக்கனும் சொல்லணும் ம்ம்ம்...


சச்சின் 
 மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்

உன் நிலை மாற்று...






வெண் மேகம்
மலைகளுக்குள்
எழுதிய கவிதை
நீராய் நிறமாறி
புது உறவாகி
நீர் வீழ்ச்சியானது...


வீழ்ச்சி தந்த வெற்றி 
நதியாக உருமாறி
கரைக் கண்டு 
தாகம் தீர்த்து 
வளம் தந்தது
பல கேள்விகளுக்கு 
விடை சொன்னது...


விடை அறிந்தும்
தெரிந்தும் 
புரிந்தும் 
மனிதா 
நீரின் மகத்துவம் அறியவில்லை
சேமிக்க மனம்  நாடவில்லை...
மனிதன் நடப்பில் பதியவில்லை...


தண்ணீருக்கும்
மொழியை அழைத்து 
சண்டை 
பிரிவினை....


இருக்கும் மரத்தை அழித்து,
உலகத்தை மாசுப்படுத்தும் நிலை 


ஒவ்வொரு துளியும் 
தாகம் தீர்க்கும்...
எதிர்க்காலத்தை தீர்மானிக்கும்


இந்த அவலநிலை போக்க
மனிதா உன் நிலை மாற்று...!

தண்ணீரை சேமிக்கும்
நிலையை உண்டாக்கி 
புதிய உலகத்தை உருவாக்கு...!

14 ஏப்., 2012

பயணிக்க ...நகைசுவை கவிதைகள்.,.


பணமில்லாததால்
பயணிக்க 
கேட் அவுட் என்றார்கள் 
இருந்தாலும்...
வித் அவுட்டில்
எனது பயணம் 
நாட் அவுட்...
============================

வடிவேலு பார்த்திபன் கலாட்டா...


வடிவேலு:
ஒரு காபி எவ்வளவு ?

பார்த்திபன்;
ஐம்பது காசு...

வடிவேலு:
அப்ப நாலு காபி சூடா கொடு ?

பார்த்திபன்;
முண்டம் இது XEROX காப்பி கடைடா?

வடிவேலு:

இது XEROX காப்பியா ?நான் காபி என 
நினைச்சேன்...



இன்றைய மனிதன்...



விருப்பமில்லா மனங்களில் 
இறுக்கம் கொண்ட நேரத்தில் 
அழிக்கமுடியா  நிலையில் 
இலக்கணம் தவறிய வரியாய்
நீரில் எழுதிய  கவிதை 
இன்றைய மனிதன்...!

13 ஏப்., 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி...ஒருபார்வை



ஒரு கல் ஒரு கண்ணாடி...
========================
பலராலும் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட படம்...
வெற்றியை விட தோற்க வேண்டும் என்று கொஞ்சம் 
எதிர்பார்ப்பு தான் அதிகம் இருந்தது  இதுக்கு...
இப்படி இருந்தாலும் இன்றைய நிலையில் 
கலகலப்பு கைகொடுக்க இன்று வெற்றியை 
நோக்கிய பயணம் இந்த படம் திரும்பி இருக்கிறது...

அரசியல் குடும்பத்தின் வாரிசுயின் படத்தில் 
அரசியல் வாடை இல்லாத படமாய் அனைவரும் 
ரசிக்கும் வண்ணமாய் இருப்பது பாராட்ட தக்க ஒன்று...

ஏற்கனவே தயாரித்த அனுபவம் கைக்கொடுக்க 
இங்கு சந்தானம் சிரிப்புக்கு திரையரங்கம் கலக்க 
ம்ம்ம் உதயநிதி திரைப்பயணம் இனி தொடரும் 
என்பதில் ஐயமில்லை....

படம் கலகலப்புக்கு பஞ்சமில்லை...
இன்றைய சூழ்நிலைக்கு இந்தப் படம் உங்களை சந்தோசப்
படுத்தும் என்பதில் ஐயமில்லை....

புதிய விளக்கு ஏற்று !



விடலைகள் சொல்லும்
விடைகள்...
புதிய வழிகள்
ஒளிக்குள் இருப்பதை!

அகலும் நமது இருளும்,
அறியாமை போக்கும் 
அன்புகொண்டு வாழ்ந்தால்.

மழலைகள் போல் 
மனதை மாற்று
ஒன்றாய் இணைந்து 
இணைத்து 
மனிதனாய் வாழ 
புதிய விளக்கு ஏற்று !

பூனை படை ...சிரிக்க மட்டும்





அந்த ஆசிரியை கண்டிப்பானவரா இருக்கலாம் 
அதுக்காக அவர் பூனை படை கேட்பது 
கொஞ்சம் ஓவரா இருக்கு...
==========================================
வரவர தலைவருக்கு என்ன பேசுகிறேன் என்றே 
புரிய மாட்டுது?


அப்படி என்னதான் பேசுகிறார் ?


தன்னுடைய பிறந்த நாளை 
ஆங்கில புத்தாண்டாய் கொண்டானும் 
என்று அமெரிக்காவுக்கு வேண்டுகோள் 
விடுகிறார்...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....


சித்திரை திங்கள்
சிக்கலாகிபோனது 
வாழ்த்துச்  சொல்ல 
தடுமாறித்தான் போனது 

தையா?
சித்திரையா?
கேள்விகளோடு 
தமிழ்ப் புத்தாண்டு 
பட்டிமன்றம்...
ஒருபக்கம்...

தமிழுக்கு தொடக்கம் 
"அ "என்றால்...
வருடத்தின் தொடக்கம் 
சித்திரை என்ற முழக்கம் 

முழக்கத்தின் முகவரியை 
வாழ்த்துக்கள் தொடரட்டுமே...

தமிழர்களின் 
வேதனைகள் அழிந்து 
வரும் வருடம் 
வசந்தம் வீசட்டுமே...

 உறவுகளுக்கு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....