15 ஏப்., 2012

உன் நிலை மாற்று...






வெண் மேகம்
மலைகளுக்குள்
எழுதிய கவிதை
நீராய் நிறமாறி
புது உறவாகி
நீர் வீழ்ச்சியானது...


வீழ்ச்சி தந்த வெற்றி 
நதியாக உருமாறி
கரைக் கண்டு 
தாகம் தீர்த்து 
வளம் தந்தது
பல கேள்விகளுக்கு 
விடை சொன்னது...


விடை அறிந்தும்
தெரிந்தும் 
புரிந்தும் 
மனிதா 
நீரின் மகத்துவம் அறியவில்லை
சேமிக்க மனம்  நாடவில்லை...
மனிதன் நடப்பில் பதியவில்லை...


தண்ணீருக்கும்
மொழியை அழைத்து 
சண்டை 
பிரிவினை....


இருக்கும் மரத்தை அழித்து,
உலகத்தை மாசுப்படுத்தும் நிலை 


ஒவ்வொரு துளியும் 
தாகம் தீர்க்கும்...
எதிர்க்காலத்தை தீர்மானிக்கும்


இந்த அவலநிலை போக்க
மனிதா உன் நிலை மாற்று...!

தண்ணீரை சேமிக்கும்
நிலையை உண்டாக்கி 
புதிய உலகத்தை உருவாக்கு...!

2 கருத்துகள்: