16 ஏப்., 2012

விடியல் வேண்டி நடத்தும்...




















விடுதலை நோக்கிய பயணம்
விபரீதம் அறிந்த போதும்
விடியல் வேண்டி நடத்தும்...


மானம் காக்க போராட்டம் 
மரணம் கூட விரும்பும்
மனங்கள் கொண்ட இனம்


வாழ்க்கை முழுதும் துயரம்
இருந்தும் உரக்க சொல்லும்
வானம் தொடும் தூரம்.


விரும்பி ஏற்கும் குணம் 
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம்
விடுதலை ஒன்றே மந்திரம்


எண்ணிய எண்ணம் நடக்க 
விடுதலை நோக்கிய பயணம்
விடியல் வேண்டி நடத்தும்...


இறந்த உறவுகள் எல்லாம் 
விதைகளாய் மாறியது என்றும்
மீண்டும் முளைக்கும்,தழைக்கும்
எங்களுக்கு பிள்ளைகளாய் பிறக்கும்...




2 கருத்துகள்: