முதுமையே இது தான்
உன் நிலையா ?
உனது இறப்புக்கு
முன் நீ காணும் விதியா ?
விடியலை தந்தவர்களுக்கு
இது தான் விடையா ?
இருந்த இடத்துக்கு
இது தான் கைமாறா?
இல்லத்தில் இல்லை இடமா
இல்லை...
இருப்பதில் இருக்க,கொடுக்க
மறுக்கும் எண்ணமா?
பிள்ளைகளே!
நீங்கள் வகுத்த குணமா ?
கிடைக்கும் நேரத்தில்
பேச மறுக்கும் மனமா?
இது அடுக்குமா
இந்த பருவம்
உனக்கும் வரும் என்று
நினைத்து பார்க்குமா ?
பெற்றோகள் உன்னோடு
இருந்தால் நன்மைகள் உனக்கு...
விடைகள் உனக்குள் இருக்கு.
முதியோர் இல்லம் எதற்கு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக