28 செப்., 2012

தமிழ்நாடே இருளில் மூழ்கியுள்ளது! டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு!சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வடசென்னை திமுக சார்பில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வ- யுறுத்தியும், சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். குறிப்பாக வியாசர்பாடி, மூலக்கடை ஆகிய மேம்பாலங்களை உடனே கட்டி முடிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றிய பிறகு, சென்னை முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகள், கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. சென்னையில் எங்கு பார்த்தாலும் காலரா பரவி வருகிறது. ஆனால் ஆளும்கட்சியினர் சென்னையில் காலரா இல்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாதிக்கப்படுவது மக்கள்தான். ஆகவே மக்களின் நலன் கருதி, சுகாதார பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாடே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. மின்சாரம் சீராக கிடைக்காததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குக்காக என்றும் பாடுபடக் கூடிய இயக்கம் திமுகதான் என்றார்.

நன்றி படம்: அசோக்...நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக