15 செப்., 2012

பிள்ளைங்களின் ஆதங்கம் ...
உயர் திரு பெற்றோர்களுக்கு 
உங்கள் குழந்தைகளின் 
கடிதம்...

நலம் நலம் அறிய ஆவா...
வேலையின் காரணமாய் 
உங்கள் பயணம் இன்னும் 
தொடர்கிறது 

அன்புக்காக எங்கள் 
உள்ளம் ஏங்குகிறது...

இருப்பதை விட்டு 
யாருக்காக இந்த 
ஓட்டம்...

உங்கள் கை பிடித்து 
நடந்து பழகியது போல 
நீங்கள் அமைதி பெற 
எங்கள்  கை பிடித்து 
நடக்க பழகிக்கொள்ளுங்கள்...

கொஞ்சம் எங்களுக்காக 
ஒதுக்குங்கள்
வாழ்க்கையை வாழ்ந்து 
பார்க்க...

1 கருத்து:

  1. அன்புக்காக ஏங்கும் பல உள்ளங்கள் உள்ளன...

    "குழந்தைகளுக்காக எல்லாமே... (சம்பாதிக்கிறோம்)" என்று கருதும் பெற்றோர்களே... குழந்தைகள் உங்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது வேறு... - என்று பலவற்றை யோசிக்க வைக்கும் வரிகள்...

    பதிலளிநீக்கு