13 செப்., 2012

சென்னை தி.நகரில் பொதுக்கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதிப்பு

சென்னை,செப்.12- 

சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியான தியாகராய நகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ரங்கநாதன் தெரு அமைந்துள்ள உஸ்மான் சாலையில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான வசதி இல்லாததால் பல வாகன ஓட்டிகள் சாலையோரத்திலும், தெருக்களிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர மாநகராட்சி சார்பில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களாலும் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.நகரின் பி.வி. ராஜமன்னார் சாலை மற்றும் வன்னியர் சாலையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதனை ஆய்வு செய்த காவல்துறை பி.வி.ராஜமன்னார் சாலை, வன்னியர் சாலை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் இந்த சாலைகள் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைகூட்டம் நடத்துவதற்கு தகுதியற்ற பகுதி என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக