என் பாலைவன இதயத்தில் சோலைவனமாய் நீ...! ================= என் இதயக்குளத்தில் அடிக்கடி நீராடி போனவள் நீயா? ================== இதயங்கள் விற்பனைக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணமிக்கலாம் இப்படிக்கு காதல்..! =================== அடித்து போட்டாலும் சாதி மதம் பேசி தடுத்துப்பார்த்தாலும் முளைத்து விடுகிறது காதல்...! ==================
பூக்களின் கணகளுக்கு வில்லி நீ...! ========== உன்னை பார்த்த பின் பூக்களுடன் ஊடல் தேனீ...! =========== உனக்காக பூக்கள் எழுதிய கவிதை உன் கூந்தலில் அழகாய்..!
மழை! இறைவன் தந்த இயற்கைக் குளியல் இது நம்மோடு உறவாடும் உறவு இது! குடை பிடித்து நீயும் மழையை தடுக்க வேண்டாம் பூமி நனையும் போது நீயும் நனைய மறுக்கவேண்டாம். இறைவன் தரும் பரிசு இனி நீயும் ஒதுங்க வேண்டாம். மேகம் தரும் மோகத்தின் கவிதை இது... மழையை போலவே ஒரு அழகு ஏது.. இந்த மழையின் அழகுக்கு சொல்ல வார்த்தைகள் இருக்கா பாரு..!
பேருந்து! நம் வாழ்க்கையோடு வலம் வரும் உறவு! புளிமுட்டையாய் திணிக்கப்பட்ட மனிதர்களின் ஊர்வலம்! பாதையே இல்லாத ஊருக்கும் பேருந்துகள் நலம் விசாரித்து வருகிறது! படிகளில் கூட பயமின்றி பயணம் செய்கின்ற இளைய தலைமுறைகள்! வன்முறைக்கு முதல் பலி பேருந்து தான்! உடைக்கப்படலாம்!இல்லை எரிக்கப்படலாம்! முன்னே போங்க என்று உலகிலேயே வாழ்த்துச்சொல்லும் நடத்துனர்! கதாநாயனாக எண்ணத்தில் வளைத்து, நிறுத்தி ,ஓட்டிவரும், நம் உயிருக்காக்கும் தோழனாய் ஓட்டுனர்! துருனாற்றம்,வேர்வை நாற்றம்,மத்தில், மல்லிகை வாசமும் வந்து போகும்! நெருக்கத்தில் ஜாதி, மதம், காணாத உலகம் பேருந்து மட்டுமே! மூச்சுக் காற்றுக் கூட ஈரத்தை காயவைக்கும் வெப்பம் இருக்கும்! சிற்றின்ப கயவர்களின் மத்தில் பெண்களின் நிலை தடுமாற்றமாகவே இருக்கும்! மனதுக்குள் அனல்க் கக்கும்! அடக்கி வச்சிக்கப்படும்!திருடர்களின்கைவரிசை நடந்த வண்ணமாக இருக்கும்! இத்தனைக்கும் நடுவில் தான் தினம் நமது பயணம்! பேருந்து நம் உறவுகளில் ஒன்று!
உன் பேச்சிலும் சிரிப்பிலும் தொட்டு பேசும் நிலையிலும் உன்னோடு இருக்கையிலும் கலந்தே போகிறேன் அதில் கரைந்தும் போகிறேன் தன்னிலை துறந்து என்னை மறந்து போகிறேன்...