20 மார்., 2012

எண்ணங்கள்!




காலத்தோடு பயிர் 
செய்யப்படுகிறது 
எண்ணங்கள்!


அவ்வப்போது உண்டாகும் 
தவறான எண்ணத்தை
கழைந்தாலும் 
எண்ணம் கொஞ்சமாய் 
மாறும் பின் தடுமாறும்!


சூரியனோடு சூடாகி 
அமர்க்களப்படுத்தும் 
காலையில் முழிக்கும் 
எண்ணம்.


குளிக்கவும் உடுத்தவும் 
உண்ணவும் அவசரத்தை 
அணைத்துக்கொள்ளும்.


எண்ணம் அலைமோத 
அவசரம் தலை தூக்க 
எல்லாமே மறந்துபோகும்...


எண்ணிய 
எண்ணமெல்லாம் 
காணாமலே போகும் 
மறதி வந்து ஒட்டிக்கொள்ளும்.




போகும் வழிகளில் 
அவசரப் பயணத்தில் 
எல்லாம் தடைப்படும்...


அவசரமே தவறு செய்ய 
உறுதுணையாகும்.
தாமதம் வந்து சேர 
மேலாளர் திட்டவும் 
எண்ணத்தில் கோபம் பிறக்கும் 


இன்று யார் முகத்தில் 
முழித்தேன் என்று 
யோசித்து காலை 
நேரப்பக்கங்கள் புரட்டப்படும்.




புரட்டிய பக்கத்தில் 
வந்தவர்கள் மீது 
கோபம் மீண்டும் விஸ்வரூபம் 
எடுக்கும்...


எண்ணம் தன் தவறுகளை 
மறைத்து நீதி பேசும் 
தன் மீது தவறே இல்லை 
என்று சத்தியமிடும்.


பாழாய் போன எண்ணம் 
தப்புக்கும் தவறுக்கும் 
உற்ற நண்பனாயிருந்து 
நம்மை ஆட்டிப்படைக்கும்.


எண்ணமே எல்லாமாய் 
வாழ்க்கையில் அங்கமாய்...
புதுப்புது அவதாரமாய்... 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக