29 மார்., 2012

கலங்கரை விளக்குகரை சேர அழைக்கும். 
கடற்கரையை காட்டும்
அன்றும், இன்றும், என்றும்,
விளக்காய் எரிந்து
விளக்கம் சொல்லும்...


வழிகள் அறிய
தூணாய் துணை நிற்கும் 
காலம் கடந்தாலும்
கரையோடு இருக்கும்.
பழைய நினைவுகளை 
படம் பிடித்து காட்டும்.


வாழ்க்கைக்கு வழிக்காட்டி 
குடும்பத்தை கரைச் சேர்க்கும் 
அப்பாவை நினைவூட்டும் 
கலங்கரை விளக்கு...
நம் வாழ்கையின் அங்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக