23 மார்., 2012

வானம் பார்த்தபடி



வானம் பார்த்த
பூமியை நினைத்து
மழைக்கு வேண்டி
கண்ணீர் வடித்தான்
விவசாயி...

மழைக்கு ஈரம்
இல்லையா...
மழை பொழிய
நேரம் வரவில்லையா ?


இரக்கமில்லாத
மனித வர்க்கம் போல
மழையுமா?

இன்னும் நம்பிக்கையோடு
வானம் பார்த்தபடி
விவசாயி...
கையேந்திய நிலையில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக