27 மார்., 2012

கவிதைகள்...




தமிழோடு கொண்ட உறவு 
வார்த்தைகளோடு 
பொய்கள் கலந்து
பிறக்கும் குழந்தை கவிதை!


எண்ணங்களை பாத்திக்கட்டி 
ஏக்கத்திற்கு
வடிக்கால் தந்து
நான் விதைத்த 
விதை கவிதை!


கடற்க்கரை மண்ணில் 
கவிதையோடு
கைப்பிடித்து 
காதலி நினைவை 
அசைப்போட்டு
வருகின்ற எண்ணத்தின் 
அழகு கவிதை...


கவிதைக்கு பொய் 
பொழிந்தால் பொலிவு
எண்ணத்தை வடித்தால் 
கவிதையின் நிலை...


காண்பதும்
காண்பதை ரசிப்பதும் 
ரசித்ததை எழுதுவதும் 
கவிதை...
கவிதை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக