31 அக்., 2011

எண்ணமே...



காலத்தோடு பயிர் 
செய்யப்படுகிறது 
எண்ணங்கள்!

அவ்வப்போது  உண்டாகும் 
தவறான எண்ணத்தை
கழைந்தாலும் 
எண்ணம் கொஞ்சமாய் 
மாறும் பின்  தடுமாறும்!

சூரியனோடு சூடாகி 
அமர்க்களப்படுத்தும் 
காலையில் முழிக்கும் 
எண்ணம்.

குளிக்கவும் உடுத்தவும் 
உண்ணவும் அவசரத்தை 
அணைத்துக்கொள்ளும்.

எண்ணம் அலைமோத 
அவசரம் தலை தூக்க 
எல்லாமே மறந்துபோகும்...

எண்ணிய 
எண்ணமெல்லாம் 
காணாமலே போகும் 
மறதி வந்து ஒட்டிக்கொள்ளும்.


போகும் வழிகளில் 
அவசரப் பயணத்தில் 
எல்லாம் தடைப்படும்...

அவசரமே தவறு செய்ய 
உறுதுணையாகும்.
தாமதம் வந்து சேர 
மேலாளர் திட்டவும் 
எண்ணத்தில் கோபம் பிறக்கும் 

இன்று யார் முகத்தில் 
முழித்தேன் என்று 
யோசித்து ...
காலை நேரப்பக்கங்கள் 
புரட்டப்படும்.


புரட்டிய பக்கத்தில் 
வந்தவர்கள் மீது 
கோபம் மீண்டும் விஸ்வரூபம் 
எடுக்கும்...

எண்ணம் தன் தவறுகளை 
மறைத்து நீதி பேசும் 
தன் மீது தவறே இல்லை 
என்று சத்தியமிடும்.

பாழாய் போன எண்ணம் 
தப்புக்கும் தவறுக்கும் 
உற்ற நண்பனாயிருந்து 
நம்மை ஆட்டிப்படைக்கும்.

எண்ணமே எல்லாமாய் 
வாழ்க்கையில் அங்கமாய்...
புதுப்புது அவதாரமாய்... 


30 அக்., 2011

இயற்கையும் இளமையும்...


இயற்கையும் இளமையும்
இரு துருவங்களாய்
போட்டி!

===========================
இவளைக்  கண்டு 
இயற்கை எழுதிய கடிதம் 
மழை.
===========================
இவளை பார்த்தே 
மலையோடு மோதியது 
வெண் மேகங்கள்.
===========================

29 அக்., 2011

பயணம்!



மழைக்குள் பயணம்
காட்டும் முதுமை
விரட்ட...
======================
மழையோடு, மனைவி
துணையோடு கரைந்தது 
முதுமை.
======================
காலம் மாறினாலும் 
களம் சொல்லும் 
காதலை...
=======================

28 அக்., 2011

மகாப் பாவம்!




பிறப்பு இறப்பு
இறைவனுக்கே சொந்தம்.


இடையின் இவனுக்கு 
ஏன் ஆதங்கம்.

பருவம் கெடுத்த பாடம்
காதல் என்று
சொல்லும்.

பெற்றோர்களின் அன்பை 
மறந்து வாழும் 
இவன் செயல்
கண்டு சொல்லும்...
எல்லாம் வெளி வேஷம்.

ரத்த தானம் கொடுக்க 
மறந்தும்...
ஒரு தலைக் காதலுக்காய்
ரத்தத்தை தண்ணீராய்
சிந்தும்...

நீ இருந்தால் யாருக்கு
லாபம்.
நீ பிறந்ததே மகாப் பாவம்!

பட்ட மரங்களாய்...


பசுமைகள் பேசிய 
பச்சை மரங்களும் 
புல் வழிச்சாலைகளும் 
மழையோடு மாறுப்பட்டதால் 
காய்ந்துப்போன சருகளாய் 
பட்ட மரங்களாய்...

எல்லாம் வாழ்க்கையோடு 
தன்  ரசனையோடு 
ஒன்றுபட்டால்
உறவாகவும் 
மாறுப்பட்டால்
மறுக்கப்படுவதும் 
இயற்கைக்கு மட்டுமா...

முதியோர் இல்லம் 
தோன்றுவதற்கும் 
மாறுப்பட்ட 
மறுக்கப்பட்ட 
நிலையே காரணம்!

மரத்தை போல 
வாழுகின்ற 
மனிதர்களால்...

பட்ட மரங்களாய்
காயம்பட்ட உள்ளங்களாய்
இன்னும் இங்கு...


27 அக்., 2011

அவலனிலை...


ஐக்கிய நாட்டு சபையின் 
அதிகாரபூர்வமான அடியாள் 
அமெரிக்கா...

இங்கு அடியான்களுக்கு
மட்டுமே அடைக்கலம்,
இல்லையென்றால் 
போர்க்களம்!

எண்ணெய் வளமா 
அவசரனிலை 
பிரகடனம்!

ஒத்துப்போனால் 
கைக்கட்டு.
இல்லையென்றால் 
ஒழித்துக்கட்டு 
இது தானே வேத மந்திரம்.

சேர்ந்து அடித்தால் 
நேட்டோ படைகள் 
எதிர்த்துவிட்டால் 
தீவரவாதிகள்!

மனித நேயமும் 
நேரம் கிடைக்கும் 
போது பேசப்படும்.
ஒத்து ஊதும் நாடுகளுக்கு 
மட்டும் அங்கீகாரம்.

போர் குற்றமா 
அடுத்த நாட்டுக்கு 
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால் 
இல்லையென்ற மறுப்பு .

இது தான் இன்றைய நிலை
இதுதானே 
அவர்களின் நிலை!


இன்னும் தொடர்கிறது 
இந்த அவலனிலை...





25 அக்., 2011

உலகமே சொல்வாய் நீ !




இன்று உலகமக்களில்
அதிகமாய் உச்சரிக்கப்படுவது
கடாஃபி!

மதுக்கடையே இல்லாத நாடு
லிபியா .விபச்சாரமா
அபச்சாரம் என்று ஓதிக்கினான்
லிபியாவின் தலைவன்
கடாஃபி!

லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!

இலவசம் தந்து
தன் வசம் அழைத்தவர்,
மறைந்த கடாஃபி!

அடபாவியாய் போனதால்
சில லிபியர்கள்
அமெரிக்க வசம் மாறியதால்
அவர் உயிரோ
மாறி மாறி
அடித்தே கொலை செய்யப்பட்டு
கடாஃபி உருமாறி போனார் !

இன்று கடாஃபி உடல்கூட
மாறி மாறி பார்க்கும் நிலை.
உலகமே பார்க்கும் முதன் முதலில்
சாவு வீட்டில் கொண்டாட்டத்தை...!

இயக்கம் அமெரிக்கா
நடிப்பு லிபியா தீவிரவாதிகள்!
இரண்டும் கலந்த உருமாற்றம்
கொண்டதே இந்த போர்க்களம்!


யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!


ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !


எட்டாவது அதிசியமாய்
பாரிய நீர்ப்பாசனத் திட்டம்
தத்தவன் இவனல்லவா !


தனது நன்மையின் பட்டியல்
நீண்டு இருந்தும்
கடாஃபிக்கு ஏன் இந்த நிலை !


இவர் எதிர்த்தது அமெரிக்காவை.
கடாஃபி இருந்தவரை உலக வங்களில்
கடன் வாங்காத நிலை !
கடாஃபி வருங்காலத்தில்
ஆபிரிக்க நாணய நிதியத்தை
உருவாக்க முயன்ற நிலை


முயன்றால் முடிவுமா!
இதை அமெரிக்காதான்
விட்டுவிடுமா?
ஆபிரிக்க பட்டினி சாவை
இன்னும் தான் உலகம்
வேடிக்கைப் பார்கிறதே!

அண்டி வாழும் நிலையில்லாமல்
துணிந்து வாழ்ந்தால்...
விடை கடாஃபி!

இப்போது உனது முறை
தவணை முறை மாறும் போது
அவலனிலை மாறுமே...

அடுத்து யெடுத்து...
அடக்கும் முறை தொடருமே!
அமைதி முறை வரும் வரை...
அதுவரை போர்களமாய்
லிபியாவின் நிலை!

போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
வணங்கும் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!

பேருந்து எரிகிறது...



பேருந்து எரிகிறது...
தாதாக்களின் மறைவுக்கும்,
மத ஊர்வலத்தின் தடைக்கும் 

தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அரசியல்வாதிகள்,
கைதுக்கும்,
ஜாதிக் கலவரத்துக்கும்...

தரம் கேட்டு போனதால்
நாட்டின் பெருளாதாரமும்...
ஒன்றுமறியா பூக்களுமல்லவா ...

தீயை எறிந்ததால்,
எரிகிறது!

கோட்டையை பிடிக்க,
பிடித்த கோட்டையை
தக்கவைக்க,இந்த 
பேருந்தில்...

தீயை எறிந்ததால்,
எரிகிறது!

அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!

உறவாக உருவாகும்!



பச்சை நிற இலைகள்,
மஞ்சள் பூவுக்கு,
உறவானது!

மஞ்சள் பூவை ரசிக்கும்,
மனதுக்கு பச்சை நிறம்
அன்னியனானது!

மஞ்சள் பூவை ரசிக்கும்
ஆசாமிக்கு, பச்சை இலை,
வெற்று இலையானது,எதிரியானது!

குளத்தோடு,அதன் குலத்தோடு
இருந்தாலும்,பச்சை இலை
இடைஞ்சலானது.

இன்முகம் மறைகிறது,
இன்னமும் தொடருகிறது,
இதன் எதிரொலி!

வளரும் நிலை அறிந்து
தடுப்புக்கள்,கொடுத்து,
பச்சை இலை அழிப்புக்கள்!

பச்சை இலைகளை அழித்தாலும்,
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!

மூடபழக்கம்...!



அறிந்தவனும்,அறியாதவனும் 
இதில் மட்டும் அடைக்கலம் 
மூடபழக்கம்...!

மடி கணினிக்குள்...




இருப்பவர்களைக் கூட மறைக்கும்
கையில் லேப்டாப் இருந்தால்!

இன்றைய தலைமுறை
கொண்ட வழிமுறை...

இணையத்தில் இதையத்தை,
திணித்து வாழும் கோலத்தை...

இருக்கும் இனிமையை, தூய
இதயத்தை இழந்த நிலை.


கணினின் கண் பட்டதால் 
கண் இமைக்கும் நேரமுமில்லை.

உண்ணாமல் ,அருந்தாமல் 
உறங்காமல்,உட்கார்ந்தே பணி.

இல்லறத்தைக் கூட,
மறக்க செய்யும் போதை,

மடி கணினிக்குள்,
சிறைப்பட வாழ்க்கை!

24 அக்., 2011

கண்கள்...!துளிப்பாக்கள்!


கண்டவர்களை ஈர்க்க,
மையோடு பொய்ழுதிய
கவிதையிது!
=============================
இமை முடி திறந்து,
மெய்மறக்க செய்யும்,
போதை இது!
===================================
அரசன் முதல் ஆண்டி வரை
அடிமை படுத்திய,
சூத்திரமிது!
===================================
சூழ்ச்சிக்குள் இரையாக்கும் 
வேதியல் உருமாற்று
உலோகமிது .
===================================
கண்ணுக்குள் மையிட்டு
இமைக்குள்  இணங்கவைக்கும்
ஆயுதமிது!
===================================
கன்னியரின் கண்பட்டால் 
போதும், கால் கடுக்க 
நிறுக்கும் உலகமிது!
==================================
இவள் இமை முடி சிரித்துவிட்டாள்
காதல் என்று கொள்ளும் 
காளையர் பூமிது!

வருமுன் காப்போம்!


வரும் தலைமுறைக்காக
வருமுன் காப்போம்.
எட்ஸ் மட்டுமல்ல...

சாதி வெறி தூண்டி 
மத வெறி கொடுத்து
கலவரத்தை நடத்தும் 
கயவர்களை கண்டு 
களையெடுப்போம்

தலைவர்கள் கைது...!
வேலை நிறுத்தம் என...
சொல்லி 
நடந்ததும் ஊர்வலம்
மூலம் உருவாகும்
வன்முறையை.

வருமுன் காப்போம்
வரும் தலைமுறைக்காக.

எய்ட்ஸ்!துளிப்பாக்கள்.



விடியும் வரை கட்டில் பாடம் 
விபரிதமறியாமலே விண்ணப்பம்
எய்ட்ஸ் ஏற்றுக்கொண்டது!
================================
இருந்ததை கொடுத்து
இரவில் வாங்கியது 
அழிக்கும் எய்ட்ஸ்!
=================================
விடிய விடிய சொல்லியும் 
விழிப்புணர்வு வரவில்லை 
எய்ட்ஸ் வரும்வரை!
=================================
இவன் விரும்பியதை நடத்த 
அவள் இருந்ததை தந்தாள்.
எய்ட்ஸ்!
==================================


விலைமகள் !துளிப்பாக்கள்.


வாசிக்கத் துடித்தவர்கள்,
வாசித்தப் பின் தந்த பட்டம்
வேசி, தாசி !
===============================

நேயர் விருப்பத்திற்கு பின்
தன் குழந்தைக்கு
தலாட்டுத் தொடரும்.
================================

விலைப் பேசி,வீழ்ந்தபின்
விடிந்தவுடன் சொல்கிறான்,
விலை மகள் என்று.
================================

மானுடம் பிறக்க ...


உறக்கம் துறந்த மக்கள் !
யார் ஆண்டால் என்ன, என்ற எண்ணத்தில்
தனது வேலைகளை செய்கிற நிலையில்...

தேர்தல் நேரத்தில் மட்டுமே
இந்தியன் என்ற எண்ணத்தில்
ஒட்டு போடும் மனிதர்கள்.

பந்தம், பாசம் மறந்து,
பணம் தின்னும் கழுகாய்,
ஓடி ஓடி உழைக்கும் இயந்திரமாய்....

மனிதர் என்ற போர்வையில்
மானுடம் மறந்த வாழ்க்கையோடு
நிம்மதியை தொலைத்த நிலையில்...


யாருக்காக இந்த ஓட்டம்?
வாட்டத்தோடு ஏன் ஓட்டம்?
விடை தெரியாமலே இன்னும் ...

இனியாவது....பிறக்கும் ஆண்டியில்,
இல்லத்தில் இன்பம் பொங்க...
மனிதர்களாய் வாழட்டும் 

வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க...
வாழ்த்துவோம் !மனிதர்களாய் வாழ!
இதில் நாமும் சேர்ந்து வாழ்வோம்!

கொசு!(கவிதை)



நோய் தந்து மகிழும் 
இந்த கொசு!

குலிசிடை குடும்பத்தை
சேர்ந்த பூச்சி இனமே 
இந்த கொசு!

ஒரே இறக்கையும்
நீண்ட கால்களும்...
கொண்ட, கொடி இடை
இல்லாத கொடிய இனம்!

ஆணோ சுத்த சைவம்,
பழங்களைத் தேடிப் பருகும்.

பெண் கொசுக்கள் தான்,
நம் தூக்கத்தை கலைத்து,
ரத்தத்தை குடிக்கும்!

குடித்துவிட்டு போகாமல்
தன் உமிழ்நீரை ,நமக்கு
தந்து செய்ந்நன்றி
கடன் தீர்க்கும்!

மலேரியா நோயை
தந்து மகிழும்.
இந்த கொசுக்கு
பயந்தே இரவானால்
வலைக்குள் அடங்கிப்போகும்
மனித இனம்!

_________________

பச்சைக்கறிகளை...



தினம் தினம்
காய்கறிகள் கலந்த உணவு,
உண்டால் இல்லை,
பின்விளைவு!

முட்டைக் கோஸ்,
காலி ஃபிளவர், கீரை
உடலுக்கு தேவை

உண்டுவந்தால் கிடைக்கும்
டி சத்துக்கள்!
ரத்தத்தை உறையவைக்கும்
இவைகள்!
இல்லையென்றால் உத்திர
போக்கு அல்லவா தொடரும்.
அவல நிலைகள்...


பீன்ஸ், பட்டாணி,
பச்சைக் காய்கறிகள்,
வேண்டும்..!


இதை சாப்பிட்டால் தான்
சுண்ணாம்பு சத்துக்கு
மனுப்போட முடியும்!


ஆன்டி ஆக்ஸிடன்ட்
நிறைந்த உணவு வேண்டும்
என்றால் பச்சைக்கறிகளை...


தெளிவுக் கொண்டு
உண்ண பழகு,
பளபளக்கும் உடல்
கிடைக்கும் பாரு!


புதினா, கொத்துமல்லி,
கருவேப்பிலை, கீரைகள்
காய்கறி விதைகளை
விதைக்க நாடு!


உன் வீட்டுக்கும்,
உனக்கும் அழகு!
என்பதை சொல்லும் 
காய்கறியை உண்ண பழகு1

23 அக்., 2011

பழைய வாழ்க்கை!





நிகழ்காலம், போர்க்காலமாய்,
காட்சியளிக்க...
எதிர்காலம் கேள்விக்குறியாய்
முன்னே நிற்க...


பொற்காலம்,இறந்தக்காலமாய்
இருந்தாலும் ,மறைந்தாலும்,
பொற்காலம் அழியாத
புதையலாய் இன்றும் உள்ளது 


மாமன், மச்சான் உறவுகள்
கூட்டு வாழ்க்கை, மனம்
மகிழும் தோட்டம்,திண்ணை,
பெரிய வீடு என்ற நிலை 
அந்த பொற்காலம்.


அன்பும், பாசமும்,
இல்லம் முழுதும் ஒளி வீச ,
விடலைகளின் ஒலிகள் முழங்க,
வாழ்ந்தக் காலமே பொற்காலம்.

அடுக்கு மாடிக்குள் 
அகப்பட்டு வாழும் வாழ்க்கையோ ...
நாம் இருவர்,நமக்கு ஒருவர் என்ற
துளிப்பாவாய் இன்று!

மரபுக்கவிதைகளாய்,
பேசிய குடும்பங்கள் எல்லாம் 
ஹைக்கூ கவிதையாய் 
சுருக்கிக் கொண்டன!


கலாச்சார மாற்றமும்,
வருமான தேவைகளும்...
பொற்காலத் தேவதையை,
புதைத்தது!


பகட்டான வாழ்க்கை 
பணத்தோடு பார்க்க...
பாசங்கள் எல்லாம் 
தூக்கி எறியப்பட்டன!


யாரங்கே!கொஞ்சம் 
இந்த அவசர உலகத்திலிருந்து 
என்னை மீட்டு போங்கள்!
மனிதனாய் மாறவேண்டும்!



மீண்டும் வருமா பொற்காலம்?
மீட்டு தருமா வருங்காலம்?


கேள்வியே இன்று.
வாழ்ந்த அந்த பொற்காலாத்தை
மனதில் கொண்டு 
வாழ்க்கை போகிறது இங்கு !




அதுவரை ஆடுங்கள்... !




வேலிக்கு ஓனாய்
சாட்சியாம்!


மனித நேயம்
பற்றி ஆதிக்க நாடுகள்
கவலை!


ஆதிக்க வெறியர்களின்
கரங்களால்  
மனித நேயம்...
மரணமானது!



போர் குற்றத்தை பற்றி
பேசும் நாடுகளே
எங்கே உங்கள் குரல்கள் ?


கொடுங்கோல் ஆட்சிக்கு 
முற்றுப்புள்ளி !
பலியானதோ அப்பாவி 
மனித உயிர்கள்!


கடாபி மரணம்...
செத்த எலியை
கொன்றுவிட்டு
கொண்டாட்டமா ?


நேட்டோ படைகள்
சொல்கிறது...
கடாபி கதை முடிந்து
விட்டது.
போரும் முடிவுக்கு
வந்துவிட்டதாம் .


எதற்கு போர் ?
ஏன் போர் ?
தன்னை எதிர்த்தால்
இதுதான் கதி!
விடை சொல்லும்
கடாபி கதை .


நேற்றும் ,இன்றும்
கர்வமாய் தொடருகிறது.
போர்க்களத்தில்...




கழுகளுக்கு
பாம்புகள் தோழர்களாய் இங்கு.
பாம்புகளே நாளை
உங்கள் கதியும் இது தானே!
காத்திருங்கள்...
களமும் ,காட்சியும்
மாறும்!


இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
நாளை இறைவனின் தீர்ப்பு,
வரும் வரை காத்திருங்கள்!



21 அக்., 2011

வறுமை ...!



வறுமையின் விழும்புகள்
தழும்புகளாய் மாறின 
இவர்களுக்கு.
==============================

வரண்ட பூமியை 
செழுமையாக்க  துடித்தது 
வறுமை!
===========================
படிப்பதை மறந்தனர் 
வறுமையின் மயக்கத்தில் 
பிஞ்சுகள்!
===========================
பிழைக்க கற்ற இவர்கள் 
படிக்க மறந்தனர் 
வறுமையால்!







கேள்வியோடு நாங்கள்!







ஆட்சி மாற்றம் காண
துணைப் போனது தேர்தல்!

ஊழலுக்கும் இருந்தனர்
உண்ணா விரதம்!

சமசீர் கல்விக்கும்
சட்டம் கடமையை செய்தது.

இன்னும் நாங்கள் உட்காரவே
இடமில்லை இதை யார் சொல்வது?

ஏழைக்கு ஏழ்மையும்,ஏக்கமும்,
ஏமாற்றமும் யார் தந்தது!

இன்னும் விடியவில்லை
எங்கள் இரவுக்கு!

மாற்றம் ஏதுமில்லை
எங்கள் பள்ளிகளுக்கு!

கல்வி வியாபாரமாய் போனதால்,
அரசுப் பள்ளிகள் கண்ணுக்கு தெரியவில்லையா ?


அரசு ஆரம்பப் பள்ளி,
மாற்றத்திருக்கு வழியில்லையா?

மாறுமா,மாற்றம் வருமா ?
என்றும் கேள்வியோடு நாங்கள்!



ஆரம்பப் பள்ளி மாணவிகள் !

20 அக்., 2011

சீய் போங்கடா ...



தேடுகிற வாதிகள் என்றே 
வீதியில் போட்டனர் 
இறந்தவர்களை.

தீவரவாதிகள் இவர்கள் என்று
பிறந்த குழந்தைகளையும் 
கொலைசெய்தனர்.

தேடிவந்து கைது செய்தனர்,
கைதுக்கு ஒரு கதையை 
சொல்லும் கயவர்கள்!

குடும்பத்து  பெண்களையும்,
மானம் பங்கம் செய்தனர்,
ஒன்றுக்கூடி...!

ஆயுதங்கள் வாழும் நாட்டில்,
சதைகளுக்கும்,  ரத்ததுக்குமா 
பஞ்சம்!

எங்கு கிடைக்கும் ?
கிடைத்தாலும் என்ன விலையப்பா
மனித நேயம் !

போராட்டமாய் உலகம் ,
விற்பனைக்கு தயார் 
ஆயுதம்!

படைத்தவன் பரிசோதிக்க 
எளியவனின் நாடே 
களம்!

இவர்களும் சொல்கிறார்கள் 
நாங்கள் நடமாடும் 
மனிதர்கள்.

சீய் போங்கடா  நீங்களும்,
உங்கள் இனமும், சொல்லுகிறது...
காட்டில் வாழும் மிருகம்!




19 அக்., 2011

கண்ணீரும் நமக்கு தேவை!






கண்ணீர் என்பது உன்னை
நீயே சுத்தப்படுத்திக்கொள்ளும்
மருத்துவம்!

கண்ணீர் இறைவன்
தந்த மகத்துவம்!
பெண்களுக்கு இது ஒரு  ஆயுதம்.

பெண்கள் வலிகளோடும்,
அழுகையோடும் தான்,
பிள்ளைகளை பெற வேண்டிவுள்ளது!

நகைக்கும் ,புடவைக்கும்
கண்ணீர் சிந்தியே
கணவனிடம் 
வாங்க வேண்டிவுள்ளது.

கண்ணகி சிந்திய கண்ணீருக்கு
தீ இருந்தது!

சில  கண்ணீருக்கு 
கதைகளும், சரித்திரமுண்டு!

கண்ணீர் வடிப்பது
உனக்கும் நலம் தரும்,
பாரமும் குறையும்.

அழு ,அழு ,மனம் லேசாகும் வரை,
உன் விழிகள் சிந்தட்டும் நீரை.

கரைப் போக்கும் கண்ணீரும் 
நமக்கு தேவை!

பாசிகளாய்...



மதச்சண்டைகள்,
மொழிச்சண்டைகள்,
மாநிலச்சண்டைகள்,
தண்ணீர் சண்டைகள்,
அடுக்கடுக்காய் ஊழல்கள் .
குளத்தில் படிந்த 
பாசிகளாய்...
அரசியல் கட்சிகள்!



உண்மை நிலை ...


வேலையில்லை என்று 
வேலையை தேடி 
வெளிநாடு வந்தேன்!

வாலிபமும், தன்மானமும் ,
விற்று வருமானம் எடுத்தேன்.

வேலையென்பது எங்குமிருக்கு 
அது இப்படியுமிருக்கு என
விற்பனை செய்கின்ற
வண்டியைப் பார்த்து...
எனது நிலையை நினைத்து
வேதனை கொண்டேன்!

விரல்கள் மூலதனம்,
முயற்சிக்கொண்டால்
நாம்  வெற்றிப்பெறலாம்!

அது உன் அருகில்
நீ  இருப்பதை அறிந்தால் 
வருங்காலம் நமக்கலாம்!


இந்த படம் சொல்லும்
உண்மை நிலை, நாமறிய 
உதவும்!

லஞ்சம் பேசுகிறது ...



கையூடல் என்றும்
லஞ்சம் என்றும்
என்னை அழைப்பார்கள்!


இடத்தை வளைத்துப் போட்டாலும்,
இருப்பதை வங்கியில் போட்டாலும்
ஊழல் என்றும் சொல்வார்கள்!

விரும்பியோ, இல்லை
விரும்பாமலோ என்னை
ஏற்பது,ஏற்றது மக்களின் தலைவிதி!


கேட்டு வாங்குவதும்..
கேட்காமலே தருவதும்
கட்டாய கடமை!


அலுவலகம் ,அரசாங்கம்...
அரசியல்வாதி,கல்லூரி,
பள்ளிகள் என்று எனக்கு
பல கிளைகளுண்டு


எங்கும் நானே!
எல்லாம்  நானே!
என்னை   நண்பனாய் ஏற்க
பல பேருண்டு!

நான் போகாத இடமில்லை
போனால்..
முடியாத வேலையில்லை!

வருமானம் வேண்டுமென்று 
தன்மானத்தை தொலைத்துவிட்டதால்
எங்கும் நான்!


தேவைக்காக..
உண்மையை விற்று,
என்னை வளர்த்து விட்டார்கள்.
வரவேற்றுவிட்டார்கள்


லஞ்சமாகிய நான்,பல வழிகளில்,
கொடுத்தும்,பலரை கெடுத்தும்,
வாங்க வைத்துவிட்டேன்...
வாங்கி வரவும் செய்கிறேன்!


சிலசமயம்
உடைப்பட்டு போனால்...
நானே தலைப்பாய் மாறுவேன்!
கைதுக்கு உடந்தையாயிருப்பேன்.


இருந்தும் எனக்கு
கவலையில்லை !
நானிருக்கும் வரை
ஊழலுக்கும் பஞ்சமில்லை!


என்னை அழிக்க,
இனி முடக்க யாருமில்லை.
இறைவனை தவிர!

18 அக்., 2011

ஆயுதம் நண்பனாய் இன்று !





மதத்தின் பெயரால்,
மொழியின் பெயரால்,
நாட்டின் பெயரால்,
விசுவருபம் எடுத்தது
ஆயுதம்!


பேரழிவு செய்திடவே
ஆறறிவு துணைப்போக
நிமிர்ந்து நின்றது...
ஆயுதம்!


ஆயுதமே ஆட்சி பிடிக்க,
மனிதன் மறந்தான், மனிதத்தை!
அணுவும் விண்ணில் பறக்க
ஆயுதம், மழையாய்  தூவியது!




அணு மழையில்,
கால் வேற,கை வேற
சிதைக்கப்பட்டு, ரத்தம் சிந்தி
மனிதன் மறைந்தான்!




குழந்தைகளும்,பெண்களும்,
பேதமில்லாமலே கொன்றான்!
எளியவரை,எதிரிகளை அழிக்க
மனிதன்    மாறினான்...
ஆயுதமாய்!




பூமி பொது சொத்தாம்,
சொன்னார்கள் அன்று
இந்த பூமிக்கே சண்டைகள்
நடக்கிறது இங்கு!

ஆறறிவு, அழிக்கவும்
துணையானது இந்த 
ஆயுதமே!
நானா! நீயா!
என்ற போராட்த்தில்...
ஆயுதமே 
இன்று நண்பனாய்...!


மம்மி என்றால் பிணம்!




அம்மா என்றால் உறவுக்கும்
உணர்வுக்கும் ,அர்த்தம் புரியும்.
மம்மி என்று சொன்னால்
பிணத்தை அல்லவா குறிக்கும்!

தாய்மொழிக்கு
நன்றிக் கடன் தமிழில் பேசுவது !
அந்நிய நாட்டியில் வாங்கும்
கடன் போல...
பேசும்போது 
வார்த்தைகளும் 
அந்நிய மொழியில் 
கடன் வாங்கப்படுகிறது 

கடன் நடப்பை முறிக்கும்,
அந்நிய மொழியோ உன்
தாய்மொழியை மறக்க செய்யும்.

கற்பது தவறில்லை
கற்றாலும் தமிழ் மொழியில்
பேசுவதில் குற்றமில்லை!


மம்மி என்றால் பிணம்!
அம்மா என்றால் பாசம்!
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.
தமிழை புரிந்துக்கொள்!
பேசிப் பழகிக்கொள்!

17 அக்., 2011

இளையத் தலைமுறையே!




வாலிபர்களே  ! இது உன்
மரணத்தின் ஒத்திகையா?
வாழ நினைக்கும் விடலையே!
இது என்ன தேசிய விளையாட்டா!
பள்ளிக்கு போகும் முன்
படிகளியில் படிக்கிற பாடமா ?

உன்னை படிக்க வைக்கும்,
தாயுக்கும் தந்தைக்கும் தரும் மரியாதையா?
உனது இந்த பயணம் தேவையா ?
உயிரின் விலை நீ  அறிவாயா ?

இளையத் தலைமுறையே!
உன் நடை முறை தவறு,
விதிமுறை வரும் வரை
உன் பயண முறை மாற்று!

இந்த வழிமுறை தவிர்த்து,
வரைமுறைக் கொண்டு  வாழு!
உலகம் போற்றும் உன்னை பாரு!


நீயாய் செய்தால் பிழையில்லை!





உன் கையேடு நம்பிக்கை இருக்க
அடுத்தவர் கைக்கு அனுமதி எதற்கு!

கையும் ஊனமானாலும் 
தன்னபிக்கை இருக்க கவலையை விரட்டு!

யாரும் தெரிந்து பிறப்பதில்லை,
செய்யும் வேளையில் தவறில்லை,

செய்யும் போது உதவி தேவையில்லை,
உன்னால் முடியும் என்றால் வெற்றியின் எல்லை.

ஒன்றுபட்டால் தோல்விக்கு வழியில்லை,
தேவையெனில் நீயாய் செய்தால் பிழையில்லை!


நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத்தொந்தரவு செய்யாதீர்கள்.

ஊனம் ஊமையாய் போனது!



ஊனம் இவரை பார்த்து 
ஊமையாய் போனது!
கால்கள் இல்லையென்றாலும்,
இருக் கைகள், கைக் கொடுக்கவே  
தன்னம்பிக்கை தலையாட்டுகிறது!

இவரோடு வாழவேண்டும் 
இருக்கும் வரை இருக்க வேண்டும் 
என்று நம்பிக்கை அடம்பிடிக்கிறது!

கண்ணீரோடும் , வாழ்க்கையோடும்,
இவர் போட்ட எதிர் நிச்சல் கண்டு,
ஊனம் ஓடி ஒழிய 
குறித்த நாட்கள் கூட
கூனி குறுகிப்போனது!