19 அக்., 2011

லஞ்சம் பேசுகிறது ...கையூடல் என்றும்
லஞ்சம் என்றும்
என்னை அழைப்பார்கள்!


இடத்தை வளைத்துப் போட்டாலும்,
இருப்பதை வங்கியில் போட்டாலும்
ஊழல் என்றும் சொல்வார்கள்!

விரும்பியோ, இல்லை
விரும்பாமலோ என்னை
ஏற்பது,ஏற்றது மக்களின் தலைவிதி!


கேட்டு வாங்குவதும்..
கேட்காமலே தருவதும்
கட்டாய கடமை!


அலுவலகம் ,அரசாங்கம்...
அரசியல்வாதி,கல்லூரி,
பள்ளிகள் என்று எனக்கு
பல கிளைகளுண்டு


எங்கும் நானே!
எல்லாம்  நானே!
என்னை   நண்பனாய் ஏற்க
பல பேருண்டு!

நான் போகாத இடமில்லை
போனால்..
முடியாத வேலையில்லை!

வருமானம் வேண்டுமென்று 
தன்மானத்தை தொலைத்துவிட்டதால்
எங்கும் நான்!


தேவைக்காக..
உண்மையை விற்று,
என்னை வளர்த்து விட்டார்கள்.
வரவேற்றுவிட்டார்கள்


லஞ்சமாகிய நான்,பல வழிகளில்,
கொடுத்தும்,பலரை கெடுத்தும்,
வாங்க வைத்துவிட்டேன்...
வாங்கி வரவும் செய்கிறேன்!


சிலசமயம்
உடைப்பட்டு போனால்...
நானே தலைப்பாய் மாறுவேன்!
கைதுக்கு உடந்தையாயிருப்பேன்.


இருந்தும் எனக்கு
கவலையில்லை !
நானிருக்கும் வரை
ஊழலுக்கும் பஞ்சமில்லை!


என்னை அழிக்க,
இனி முடக்க யாருமில்லை.
இறைவனை தவிர!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக