25 அக்., 2011

உலகமே சொல்வாய் நீ !
இன்று உலகமக்களில்
அதிகமாய் உச்சரிக்கப்படுவது
கடாஃபி!

மதுக்கடையே இல்லாத நாடு
லிபியா .விபச்சாரமா
அபச்சாரம் என்று ஓதிக்கினான்
லிபியாவின் தலைவன்
கடாஃபி!

லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!

இலவசம் தந்து
தன் வசம் அழைத்தவர்,
மறைந்த கடாஃபி!

அடபாவியாய் போனதால்
சில லிபியர்கள்
அமெரிக்க வசம் மாறியதால்
அவர் உயிரோ
மாறி மாறி
அடித்தே கொலை செய்யப்பட்டு
கடாஃபி உருமாறி போனார் !

இன்று கடாஃபி உடல்கூட
மாறி மாறி பார்க்கும் நிலை.
உலகமே பார்க்கும் முதன் முதலில்
சாவு வீட்டில் கொண்டாட்டத்தை...!

இயக்கம் அமெரிக்கா
நடிப்பு லிபியா தீவிரவாதிகள்!
இரண்டும் கலந்த உருமாற்றம்
கொண்டதே இந்த போர்க்களம்!


யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!


ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !


எட்டாவது அதிசியமாய்
பாரிய நீர்ப்பாசனத் திட்டம்
தத்தவன் இவனல்லவா !


தனது நன்மையின் பட்டியல்
நீண்டு இருந்தும்
கடாஃபிக்கு ஏன் இந்த நிலை !


இவர் எதிர்த்தது அமெரிக்காவை.
கடாஃபி இருந்தவரை உலக வங்களில்
கடன் வாங்காத நிலை !
கடாஃபி வருங்காலத்தில்
ஆபிரிக்க நாணய நிதியத்தை
உருவாக்க முயன்ற நிலை


முயன்றால் முடிவுமா!
இதை அமெரிக்காதான்
விட்டுவிடுமா?
ஆபிரிக்க பட்டினி சாவை
இன்னும் தான் உலகம்
வேடிக்கைப் பார்கிறதே!

அண்டி வாழும் நிலையில்லாமல்
துணிந்து வாழ்ந்தால்...
விடை கடாஃபி!

இப்போது உனது முறை
தவணை முறை மாறும் போது
அவலனிலை மாறுமே...

அடுத்து யெடுத்து...
அடக்கும் முறை தொடருமே!
அமைதி முறை வரும் வரை...
அதுவரை போர்களமாய்
லிபியாவின் நிலை!

போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
வணங்கும் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!

6 கருத்துகள்:

 1. போர்குற்றம் பொறுப்பாளி
  யார் என்பதை கை நீட்டி
  உலகமே சொல்வாய் நீ !
  வணக்கும் நம்பிக்கைப்படி
  இறைவா நீ திருப்பியடி!
  --------
  kandippaga annaa ulagaiiellam thanvasam kolla thannai thalai thooki kondadadum avargalin alivum vaegu thoraththil erukkathu iraivan thiruppi adippan enra nambugiren anna

  பதிலளிநீக்கு
 2. அருமை! கடாபியைப் பற்றி அறியா செய்திகளை அள்ளி தந்த கவிதை! இறூதியில் கண்ணீர் வர வைத்தது! இன்னும் எத்தனை நாடுகள் அமெரிக்கர்களால் அழிக்கபடுமோ? அருமையான உணர்வுகள்! அழகான கவிதை! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 3. கடாபியைப் பற்றி இதுவரை அறியாத செய்திகளை சொன்ன கவிதை இறுதியில் கண்ணீர் வழவைத்தது.இன்னும் எத்தனை நாள்கள் அமெரிக்க அட்டூழியம் தொடருமோ? அருமையான கவிதை ! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 4. உண்மை தான்...

  வல்லரசுகளைப் பகைத்து கொண்டால் அவை வல்லூற்றினைப் போல தாக்கும்..

  நேற்று சதாம்
  இன்று கடாபி
  நாளை ...?

  பதிலளிநீக்கு
 5. கண்டிப்பாக அண்ணா உலகையெல்லாம் தன்வசம்
  கொள்ள தன்னை தலை தூக்கி கொண்ட்டாடும் அவர்களின் அழிவும் வெகு தூரத்தில் இருக்காது இறைவன் திருப்பி அடிப்பான் என்ற நம்புகிறேன் அண்ணா!
  இனிய தங்கையே ,உங்களது ,நீண்ட மறுமொழியும் ,உங்கள் மனக்குமறளையும் அறிய முடிந்தது.உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்
  வேண்டுதலுக்கும் நன்றி தங்கையே .

  பதிலளிநீக்கு
 6. உங்கள் பொன்னான நேரத்தில் வந்து கவிதையை படித்து ,மறுமொழிகள் தந்த இளவல்களுக்கு நன்றி .நன்றி !
  தளிர் ,ஆளுங்க.இருவர்களுக்கும் நன்றி .

  பதிலளிநீக்கு