23 அக்., 2011

பழைய வாழ்க்கை!





நிகழ்காலம், போர்க்காலமாய்,
காட்சியளிக்க...
எதிர்காலம் கேள்விக்குறியாய்
முன்னே நிற்க...


பொற்காலம்,இறந்தக்காலமாய்
இருந்தாலும் ,மறைந்தாலும்,
பொற்காலம் அழியாத
புதையலாய் இன்றும் உள்ளது 


மாமன், மச்சான் உறவுகள்
கூட்டு வாழ்க்கை, மனம்
மகிழும் தோட்டம்,திண்ணை,
பெரிய வீடு என்ற நிலை 
அந்த பொற்காலம்.


அன்பும், பாசமும்,
இல்லம் முழுதும் ஒளி வீச ,
விடலைகளின் ஒலிகள் முழங்க,
வாழ்ந்தக் காலமே பொற்காலம்.

அடுக்கு மாடிக்குள் 
அகப்பட்டு வாழும் வாழ்க்கையோ ...
நாம் இருவர்,நமக்கு ஒருவர் என்ற
துளிப்பாவாய் இன்று!

மரபுக்கவிதைகளாய்,
பேசிய குடும்பங்கள் எல்லாம் 
ஹைக்கூ கவிதையாய் 
சுருக்கிக் கொண்டன!


கலாச்சார மாற்றமும்,
வருமான தேவைகளும்...
பொற்காலத் தேவதையை,
புதைத்தது!


பகட்டான வாழ்க்கை 
பணத்தோடு பார்க்க...
பாசங்கள் எல்லாம் 
தூக்கி எறியப்பட்டன!


யாரங்கே!கொஞ்சம் 
இந்த அவசர உலகத்திலிருந்து 
என்னை மீட்டு போங்கள்!
மனிதனாய் மாறவேண்டும்!



மீண்டும் வருமா பொற்காலம்?
மீட்டு தருமா வருங்காலம்?


கேள்வியே இன்று.
வாழ்ந்த அந்த பொற்காலாத்தை
மனதில் கொண்டு 
வாழ்க்கை போகிறது இங்கு !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக