21 அக்., 2011

கேள்வியோடு நாங்கள்!ஆட்சி மாற்றம் காண
துணைப் போனது தேர்தல்!

ஊழலுக்கும் இருந்தனர்
உண்ணா விரதம்!

சமசீர் கல்விக்கும்
சட்டம் கடமையை செய்தது.

இன்னும் நாங்கள் உட்காரவே
இடமில்லை இதை யார் சொல்வது?

ஏழைக்கு ஏழ்மையும்,ஏக்கமும்,
ஏமாற்றமும் யார் தந்தது!

இன்னும் விடியவில்லை
எங்கள் இரவுக்கு!

மாற்றம் ஏதுமில்லை
எங்கள் பள்ளிகளுக்கு!

கல்வி வியாபாரமாய் போனதால்,
அரசுப் பள்ளிகள் கண்ணுக்கு தெரியவில்லையா ?


அரசு ஆரம்பப் பள்ளி,
மாற்றத்திருக்கு வழியில்லையா?

மாறுமா,மாற்றம் வருமா ?
என்றும் கேள்வியோடு நாங்கள்!ஆரம்பப் பள்ளி மாணவிகள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக