25 அக்., 2011

மடி கணினிக்குள்...




இருப்பவர்களைக் கூட மறைக்கும்
கையில் லேப்டாப் இருந்தால்!

இன்றைய தலைமுறை
கொண்ட வழிமுறை...

இணையத்தில் இதையத்தை,
திணித்து வாழும் கோலத்தை...

இருக்கும் இனிமையை, தூய
இதயத்தை இழந்த நிலை.


கணினின் கண் பட்டதால் 
கண் இமைக்கும் நேரமுமில்லை.

உண்ணாமல் ,அருந்தாமல் 
உறங்காமல்,உட்கார்ந்தே பணி.

இல்லறத்தைக் கூட,
மறக்க செய்யும் போதை,

மடி கணினிக்குள்,
சிறைப்பட வாழ்க்கை!

2 கருத்துகள்:

  1. உங்களின் இந்தக் கணிப்பு உண்மைதான்

    நிகழ்கால கவிதை

    பாராட்டுகள் படைப்பாளரே

    பதிலளிநீக்கு
  2. இளவலின் வருகைக்கண்டு மகிழ்ச்சி.
    மறுமொழிக் கண்டு நெகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு