வீட்டுக்கு வீடு, வெளிச்சத்தில் வாழ்கிறோம்.
உள்ளத்தை இருட்டாக்கிக் கொள்கிறோம்.
சீண்டல், கிண்டல், கொண்டு மகிழ்கிறோம்.
அடுத்தவரின் துன்பத்தைக் கண்டு ரசிக்கிறோம்.
நம் வாழ்க்கையை, இப்படியே கழிக்கிறோம்.
நன்மைகளை செய்யவே, மறுக்கிறோம்.
நல்லதை சொன்னால் சிரிக்கிறோம்.
இந்த நிலை மாறவேண்டும்!
நமக்குள் மாற்றம் வேண்டும்!
அடுத்தவர் நிலை அறியவேண்டும் !
அல்லல் போக்க உதவவேண்டும்!
புறம் பேசுவதை நிறுத்தவேண்டும் !
மத வெறியை புதைக்க வேண்டும் !
மனித நேயம் வளர வேண்டும் !
மனிதனாய் மீண்டும் மாறவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக