பயன் தரும்
வாழ்க்கை எனக்குள் இருக்க
இருக்கைகள் துடுப்பாய் பார்க்க
எதிர் நீச்சல் போடா எனக்கென்ன
பயம்.
இருப்பதை கொடுத்து
ஈகையில் வாழ்வேன்.
வருவதை கொண்டு
வளமுடன் வாழ்வேன்.
நேற்றய உலகமும்,
இன்றைய உலகமும்,
என்னோடு இருக்க.
நாளைய கனவுகள் எதற்கு?
நன்கு திசைகளும்
எனக்குள் அடக்கம்.
சூரியன் உதிக்கும்
திசையோ
என் வீட்டில் துவக்கம்.
பயன் தரும் வாழ்க்கை
எனக்குள் இருக்க
ஏழ்மை என்னை கண்டு
நடுங்கும்.
முன்னேறும் வாழ்க்கை
முகவரியாய் இருக்க...
கையந்தி நீ நின்றால்
உலகம் உன்னை சபிக்கும்.
மிக அருமை அண்ணா ...
பதிலளிநீக்குஒவ்வொரு வரியும் ரசித்து ரசித்து படித்தேன் அண்ணா...
உண்மை சொல்லும் வரிகள் எங்களை உற்சாப்படுத்தும் உங்கள் எழுத்துக்கள் அண்ணா ....
நன்றி கலை .உங்கள் ஊக்கமும் ,வருகையும் என்னை உற்சாகப் படுத்தும்.
பதிலளிநீக்கு