கற்பு என்றால் என்ன,
என கேட்டேன்.
கற்பு என்றால்
பெண்மைக்குள்ள
சிறப்பு என்றார்கள்.
அந்த சிறப்புரியவர்
அறிவிர்களா என கேட்டேன்.
இலக்கியத்திலும் ,
புராணத்திலும்
வரும் பெயரை சொன்னார்கள்.
ஒருவரும் தன் தாயை ,
மனைவியை ,சகோதரிகளை
சொல்லமறந்தார்கள்!
கற்பு என்பது தமிழ் பண்பாடு
காலம் காலமாய் இந்த கோட்பாடு..
பெண்களுக்கு மட்டுமே உடன்பாடு !
கற்பு பற்றி பேசும் இவர்கள்
கற்பும் ஆண்களுக்கு உண்டு
என்பதை மறந்தே போனார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக