வீட்டுக்கு வீடு, வெளிச்சத்தில் வாழ்கிறோம்.
உள்ளத்தை இருட்டாக்கிக் கொள்கிறோம்.
சீண்டல், கிண்டல், கொண்டு மகிழ்கிறோம்.
அடுத்தவரின் துன்பத்தைக் கண்டு ரசிக்கிறோம்.
நம் வாழ்க்கையை, இப்படியே கழிக்கிறோம்.
நன்மைகளை செய்யவே, மறுக்கிறோம்.
நல்லதை சொன்னால் சிரிக்கிறோம்.
நெருப்பாய் தானே பார்க்கிறோம்!
இந்த நிலை மாறவேண்டும்!
நமக்குள் மாற்றம் வேண்டும்!
அடுத்தவர் நிலை அறியவேண்டும் ! அல்லல் போக்க உதவவேண்டும்!
புறம் பேசுவதை நிறுத்தவேண்டும் !
மத வெறியை புதைக்க வேண்டும் !
மனித நேயம் வளர வேண்டும் ! மனிதனாய் மீண்டும் மாறவேண்டும்.
உள்ளத்தில் ஒன்று , உதட்டில் ஒன்று என பேசுகையில் சொந்தம், பந்தம் ,தனித்து வாழும் நிலையில், என்றோ ஒரு நாள் ,தொடரும் உறவில், தன்மையில் ,வெறுமையில்,இருக்கையில், பாட்டில்,இணையத்தில்,மாறிய காலத்தில், பெருமையில், பகட்டியில்,பொறாமையில், சொல்லில்,செயலில்,நடக்கையில், இந்த வாழ்க்கை, எத்தனை நிறத்தில், இருப்பதை பார்க்கும் ,நேரத்தில், வீண் பேச்சில் வெற்று கூச்சலில் இன்னும் தொடர்கிறோம் வீண் விளையாட்டில், மண்ணியில் மறைய போகும் வாழ்கையில், ஏழைகள் கையேந்தும் நிலையில், கந்தல், கிழிந்தல்,பார்க்கையில், இன்னும் இறக்கம் வரவில்லை உள்ளத்தில், இல்லாமை , இல்லமால் போகும் வகையில், இனிதே இணைத்துவிடுவோம் ஈகையில்!
அழகு கொண்ட
உன் முகத்தில்
அழுகை கொண்டால்
தப்பப்பா.
செல்லப்பா
செவி சாய்த்து
கேளாப்பா.
முத்தப்பா என் முகத்தை
கொஞ்சம் பாரப்பா.
உன் அப்பாவை
பார்த்து பயமாப்பா?
அவரும் இங்கு
குழந்தையப்பா.
அப்பப்பா அழுகை
போதும் நிறுத்தப்பா.
என் பலனை அறிய மறவாதே!
எனக்குள் இருப்பது
ஏ,சி,வைட்டமிகள்
தோலோடு உண்டால்
ஓசியாக கிடைக்கும்,
ஆரோகியங்கள்!
என் கொட்டைகளில்
கால்சியம் ,கொழுப்பும்
இருப்பதை அறியுங்கள்.
அல்போன்சா,பகனபள்ளி,
ராஸ்புரி நீலம்,ஒட்டு
மல்கோவா,என எனக்கு
உடன்பிறப்புக்கள்.
எங்களை ரசித்து உண்ணுங்கள் இயற்கையாய் கிடைக்கும்
சத்துக்களை சாப்பிட்டு
பழகுங்கள்,
உங்கள் உடலுக்கு உதவுங்கள்.
ஒன்று தெரியுமா ?
நேற்றைய அதிபதிகளே...
இன்று நாங்கள் அகதிகள்!
உங்கள் நாட்டிற்கு வந்தது
அதிகாரத்தில் பங்கு
கேட்டு அல்ல!
உங்கள் அன்பான உறவுகளை
கேட்டு வந்திருக்கிறோம்.
இன்றையநிலைக்கொண்டு ,
எங்க ஏழ்மையை கண்டு ,
எங்கள் வாழ்க்கையை
ஏலம் போடாதிர்கள்!
சோற்றுக்கு கையேந்தும்
பிறவிகள் அல்ல நாங்கள்.
எங்கள் சோகத்திருக்கு
வரலாறு உண்டு .
விடியலை நோக்கும்
விடுதலைக் கதிர்கள் நாங்கள்!
எங்களுக்காக எங்களையே
இழப்பதற்கு தயங்காதவர்கள்.
எங்கள் இறப்புக்கூட
மற்றவர்களை காயம்படுத்தக் கூடாது
என்ற எண்ணம் கொண்டவர்கள்.
எங்கள் எண்ணம் எதிரியை நோக்கி...
அப்பாவி மக்களை அல்ல.
நாங்கள் தீவிரவாதி இல்லை!
பலமைவாதியும் அல்ல.
சீர்திருத்தவாதியும் அல்ல!
விடியலை நோக்கி
மண்ணுக்காக போராடும்
விடுதலைவாதி!
வேலை கிடைக்கவில்லை.
வாழ்கையின் வெறுப்போடு ,
சலிப்போடு, உள்ள வர
வருத்தமும், கோபமும்,
கைகுலுக்கியது !
இன்னும் அப்பாவின்
அர்ச்சனையும் சேர ,
நண்பனின் உயர்வு
பொறாமை கொள்ள ,
தற்கொலை,எண்ணம்,
தலைக்கேறியது
எடுத்தேன் மாத்திரையை,
இன்னும் சிலமணி நேரம்
என்ற எண்ணம் மேலோங்க,
ராசா என்ற மொழிக்கேட்டன்.
தாய்மையின் குரலாய்!
யாரது என கேட்டேன்
நான் தான் தன்னம்பிக்கை
என்றது !முழித்தேன்.
தன்னம்பிக்கை பேசியது,
தற்கொலையோடு ஏன்
உடன்பாடு !
நம்பிக்கை உறுதியோடு...
இன்னல்கள் இணையும் போது
இருக்கைகள் இருக்கு பாரு.
இனியுமா தற்கொலை எண்ணத்தோடு
இறக்கணுமா கேள்வியை கேளு
தன்னம்பிக்கை நான்
இருக்கிறேன் உன்னோடு .
என எண்ணியே புறப்படு
புதிய பிறப்போடு!
தத்துயேடுத்தவள்
என் மனைவி!
வாழ்வுக்கு விழித்தந்தவள்
தாய்!
புதிய வாழ்வுக்கு வழித்தந்தவள்
மனைவி!
மொழியைத்தந்தவள்
தாய்!
தலைமுறை தந்தவள்
மனைவி!
வாழ்வின் புத்தங்கள்
இவர்கள்
வாழ்கையின் அர்த்தங்கள் இந்த உறவுகள்
வாழும்போதே கிடைத்த
சொர்க்கங்கள்,