26 ஆக., 2012

நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி


 
நடிகை மனோரமா மூச்சுத் திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மனோரமா ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். சில மாதங்களுக்கு முன் ஓட்டல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவர் காலில் முறிவு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காலை குணமாக்கினர். பின்னர் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு பின் மீண்டும் உடல் நிலை பாதித்தது.

ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். செயற் கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தார். பிறகு குணமாகி வீடு திரும்பினார்.

இன்று திடீரென மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர் பிரேம் குமார் தலைமையி லான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக