28 ஆக., 2012

நாடக நடிகராக இருந்து டைரக்டர் ஆனேன்: ஷங்கர்

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த ‘அந்நியன்’ படம் மெகா ஹிட்டானது. இப்படத்தையடுத்து இவர்களின் கூட்டணி மீண்டும் இணைகிறது. இவர்கள் இணையும் புதுப்படத்திற்கு ‘ஐ’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘ஐ’ என்றால் அழகு, அரசன், குரு, ஆச்சர்யம், பலவீனம் என பல அர்த்தங்களை கூறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இரண்டாவது முறையாக சந்தானம் விக்ரமுடன் இணைகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், முக்கியமான வேடத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியும், நடிகர் பிரபுவின் அண்ணனுமான ராம்குமாரும் நடிக்கின்றனர். முதல்முறையாக சினிமாவுக்கு நடிகராக அறிமுகமாகிறார் ராம்குமார்.

இப்படத்தின் இசையமைப்பை ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். இவரது இசையில் ஏற்கனவே ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சவுண்ட் எபெக்ட்ஸை ஹாலிவுட்டில் ஹாரிபார்ட்டர் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலிய நிறுவனமான ரைசிங் சன் பிக்சர்ஸ் மேற்கொள்ளவுள்ளது.

மிகப் பிரம்மாண்டமான செலவில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இப்பொழுதிலிருந்தே ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. வரும் ஜூலை 15-ம் தேதி முதல் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
---------------------------------------------------------------------
விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமன்குமார், ரீமா சென், பிந்து மாதவி பியா நடிக்க மீண்டும் ரீமேக் ஆகிறது.

வடபழனியில் நடந்த இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பங்கேற்று பேசியதாவது:-

சினிமாவில் நான் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. அப்படி சாதித்ததாக யாரேனும் கருதினால் அந்த பெருமை எஸ்.ஏ.சந்திரசேகரையே சாரும். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக சேரும் முன் நாடக நடிகராக இருந்தேன். சில மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது நான் பெரிய சோம்பேறி.

எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் நடிக்க வாய்ப்பு கேட்டுப் போனேன். ஆனால் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டேன். சுறுசுறுப்பு, ஒழுக்கம் , நேரம் தவறாமை அனைத்தையும் அவரிடம்தான் கற்றேன். என்னை போல் பல இயக்குனர்களை எஸ்.ஏ. சந்திரசேகரன் வளர்த்து விட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் விமலாராணி, படத்தின் இயக்குனர் சினேஹா பிரிட்டோ மற்றும் தமன்குமார், ரீமாசென், பிந்து மாதவி பங்கேற்றனர்.

1 கருத்து:

  1. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு