29 ஆக., 2012

சென்னை ;சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்சென்னை ;சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்


சென்னை அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 15 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான அய்யப்பன் சட்டக் கல்லூரிக்குள் செவ்வாய்க்கிழமை நண்பகல் வந்தாராம். இதைப் பார்த்த கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் அவரிடம் தகராறு செய்தனராம். இதில் அய்யப்பனுக்கு ஆதரவாக ஆசிக், அரவிந்த், சல்மான் ஆகியோர் பேசியதாகத் தெரிகிறது.


இதில் தகராறு முற்றவே, இரு தரப்பு மாணவர்களும் மோதிக் கொண்டனராம். பின்னர் விடுதி மாணவர்கள், கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், சஸ்பெண்ட் செய்யப் பட்ட மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும், ஜூலை மாதம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் கல்லூரி மாணவர்களிடம் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் சமாதானமடைந்த மாணவர்கள், தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

இந்நிலையில் இச் சம்பவம் குறித்து இரண்டாம் ஆண்டு மாணவர் இளையபெருமாள் என்ற மாணவர், தன்னை அரவிந்தன் என்ற மாணவர் மிரட்டியதாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி நக்கீரன் 

2 கருத்துகள்:

  1. மறுபடியும் ஆரம்பம் ஆச்சா...

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  2. சின்ன வேண்டுகோள் : Comments Author's Approval இருக்கட்டும்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... நன்றி...

    பதிலளிநீக்கு