26 ஆக., 2012

நீயே!


அச்சமில்லை
அச்சமில்லை
உன் வாழ்விலே!

வரும் தோல்வியெல்லாம்
பறந்து போகுமே
நீ துணிந்து நின்றால்...

வஞ்சமில்லை
வஞ்சமில்லை
காணும் வாழ்விலே!

வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம்
நடுங்கி ஓடுமே
நீ எதிர்த்து போரிட்டால்
வெற்றி உன் வசமாகுமே

பயமில்லை
பயமில்லை
வாழும் வாழ்விலே!

மலையென
எரிமலையென
எழுந்தால்
உன் வெற்றியை
அடைவாய் நீயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக