வயது ஐம்பது
எட்டி பார்த்தால்...
நோய் அழைக்காத
விருநதாளியாய்
உள்ளே வரலாம்...
குடும்ப வியாதிகளை
தள்ளிப்போடலாம்
தவிர்க்க முடியாது
உடற்பயிற்சியாய்
தினம் நடக்க கற்றுக்கொள்...
உணவு முகவரியை
முறையாய் மாற்றி
சரியான நேரத்தில்
உடலுக்குள் அனுப்பு...
காய்கறிகளை உண்ண
பழகு...
மருந்துக்கு விடைத்தந்து
உணவுக்கு விண்ணப்பம்
கொடு...
மூன்றியில் ஒரு
பங்கு உணவு
ஒரு பங்கு தண்ணீர்
மிச்சத்தை காலியாய்
இருக்கட்டும்...
எல்லாம் சரிதான்
வயதான பெற்றோர்களுடன்
இருக்கும் வரை
இறுக்கத்தை போக்கி
நெருக்கத்தை ஏற்படுத்து...
அவர்கள் இறப்புக்கூட
இலகுவாய் இருக்கும்...
இதற்கு மேல் என்ன சார் வேண்டும்...?
பதிலளிநீக்குமுடிவில் இரு வரிகள் மனதை நெகிழ வைத்தது...