30 ஆக., 2012

மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி, ஆக. 30-

மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு 
அசாம் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என செல்போன்கள மற்றும் இணையதளங்கள் மூலம் வதந்தி பரவியது.

இதையடுத்து வேறு மாநிலங்களில் தங்கியிருந்து வேலை பார்த்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்பினார்கள். இதையடுத்து செல்போன் மூலம் வதந்தி பரவுவதை தடுப்பதற்காக, மொத்தமாக எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 17-ம் தேதி தடை விதித்தது.

ஒரே நேரத்தில் 5 தகவல்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. மேலும் சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் வடகிழக்கு மக்கள் மீதான தாக்குதல் பீதி ஒரளவு குறைந்தபின்னர், 20 எஸ்.எம்.எஸ். வரை மொத்தமாக அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டது.தற்போது அந்த கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்ப விதிக்கப்பட்ட தடை முழுவதும் நீக்கப்படுவதாகவும், இந்த தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நன்றி மாலைமலர் 

1 கருத்து:

  1. தகவலுக்கு நன்றி சார்... (எங்க கடைப்பையன் எப்போதும் SMS தான்... அவனுக்கு சந்தோசம்....)

    பதிலளிநீக்கு