க
கடந்த 25.8.2012 அன்று இரவு மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் ஒரு இளைஞரை யாரோ கொலை செய்து விட்டுள்ளனர். இது தெரிந்தவுடன் அப்பகுதி மக்கள் கும்பலாக கூடி நின்றிருந்துள்ளனர். அங்கு வந்த மதுரவாயல் போலீசு நிலைய துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் விசாரணை எதுவும் இன்றி அங்கு நின்றிருந்த மக்களை விரட்டியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் சிலரை கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றியுள்ளனர். அதில் பு.மா.இ.மு உறுப்பினரின் தம்பியும் ஒருவர். அப்போது அங்கு வந்த பு.மா.இ.முவின் அப்பகுதி இளைஞர் கிளையைச் சார்ந்த தோழர்கள் திவாகர், குமரேசன் இருவரும் போலீஸ் துணை ஆய்வாளரிடம் தங்களை அமைப்புத் தோழர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு எதுவும் தெரியாத அப்பாவி மாணவர்களை கைது செய்ய வேண்டாம் என்று அவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர்.
இதை எதையுமே காதில் வாங்காத துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் எதற்கெடுத்தாலும் அமைப்புனு வந்திடுறீங்க என்று கத்திக்கொண்டே தோழர்கள் இருவரையும் அடித்து இழுத்து கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மதுரவாயல் போலீஸ் ஆய்வாளர் தோழர்களை போலீசு வேனில் வைத்து கடுமையாகத் தாக்கி அழைத்துச் சென்றுள்ளார்.
இத்தகவல் தெரிந்ததும் சென்னைப் பகுதி பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்த்து விசாரிக்க மதுரவாயல் போலீஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு தோழர்கள் இல்லை. போலீசாரிடம் விசாரித்தற்கு எவ்விதபதிலும் இல்லை.
ஆய்வாளரிடம் போனில் பேசும்போது உங்கஆளுங்க எங்கஎஸ்.ஐயை அடித்திருக்காங்க அதனால கைது செய்திருக்கிறோம் என்றுள்ளார். அவர்களை பார்க்க வேண்டும் என்றதற்கு பதில் இல்லை. அன்று இரவு முழுவதும் முயன்றும் தோழர்களை காட்டவில்லை.
சிறையிலடைத்ததாகவும் தெரியவில்லை. காலையில் போலீசு உதவி ஆணையர் சீனிவாசனிடம் பேசும்போது முதலில் 30 நிமிடம் கழித்துகாட்டுவதாக சொன்னார். பின்னரும் தோழர்களை எங்குவைத்திருக்கிறோம் என்று சொல்லவும் இல்லை, காட்டவும் இல்லை.
இப்படி முதல் நாள் இரவிலிருந்து அடுத்த நாள் வரை அலைகழிக்கப்பட்டும் தோழர்களை பார்க்க முடியவில்லை, அவர்களிடம் நடந்தது பற்றிவிசாரிக்கவும் முடியவில்லை. அவர்களை சிறையில டைத்தாகவும் தெரியவில்லை.
தோழர்கள்கைதும்,அதைப்பற்றியானதகவல்களும் மறைக்கப்படுவதால் இதைப் பற்றியான உண்மைத் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் 26.8.2012 அன்று மதியம் சுமார் 1மணியளவில் பு.மா.இ. முதோழர்கள் பகுதிமக்களுடன் இணைந்து மதுரவாயல்போலீசுநிலையம் சென்றுவிசாரிக்கமுயன்றனர்.
போலீசு ஏ.சி தோழர்கள்கைது பற்றி பேசமறுத்துவிட்டுஉங்கள் அனைவரையும் கைதுசெய்வேன் என்றுமிரட்டியுள்ளார். தோழர்கள் இதைஎதிர்த்து முழக்கமிட்டுள்ளனர். தயாராக நிறுத்திவைக் கப்பட்டிருந்த போலீசுகும்பல்ஏ.சிசீனிவாசன் தலைமையில் தோழர்கள்,பகுதிமக்கள் அனைவரையும்கொலைவெறியுடன்தாக்கியது.
தலைவர்களை 10,15சேர்ந்துபோலீசார்குறிவைத்துதாக்கினார்கள்.பெண்தோழர்களை அடித்து ரோட்டில் கீழேதள்ளிபூட்ஸ்காலால்மிதித்துள்ளனர். சிலபெண் தோழர்கள் உடையைவக்கிரமாகபிடித்து இழுத்து கிழித்து தாக்கியுள்ளனர்.
சில மாணவித்தலைவர்களையும், இளைஞர் தலைவர்களையும் தனியாக போலீசுநிலையத்திற்குள் இழுத்துச்சென்று காட்டுமிராண்டித்தனமாகதாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.
நாகூசத்தக்க வார்த்தைகளால் அவமானப்படுத்தியுள்ளனர். சிலசிறுவர்களை தூக்கி கீழே எறிந்துள்ளனர். இப்படி போலீசு கும்பல்கொலைவெறியுடன் தாக்கியதில்அனைத்துத்தோழர்களும் கடுமையாகபாதிக்கப்பட்டனர்.8 தோழர்கள் ( மணிகண்டன், கிருஷ்ணகுமார்,விவேக் , பிரேம், வெங்கடேஷ்,ராஜா, பாபு, வீரா, ) படுகாயம்அடைந்தனர். இதில்கிருஷ்ணகுமார், விவேக்இருவருக்கும்கை, கால்களில் பலத்த அடிபட்டதால் இன்றுவரை அவர்களுக்கு மருத்துவமனையில் மருத்துவம்பார்க்கப் படுகின்றது.
மற்றவர்களில் பெண்தோழர்கள் 14 பேர்உள்படமொத்தம் 64 பேர்கள் மீது பொய்வழக்குப் போட்டு கைது போலீசார் செய்தனர். இவர்களில் பெண்தோழர்கள் 14 பேரை மட்டும் அன்று இரவே (26.8.12 இரவுசுமார் 2 மணிக்கு) பிணையில் விடுவித்தனர். ஆண்தோழர்கள் 50 பேரைஅடுத்தநாள் (27.8.12) வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களை சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்து வந்த நேரத்தில்தான் , முதலில் 25 ந்தேதி இரவு அடித்து இழுத்துச் சென்று மறைத்து வைத்திருந்த தோழர்கள்திவாகர், குமரேசன் இருவரையும் சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்துவந்தனர். அதுவரை அவர்கள் இருவரையும் வேவ்வேறு இடங்களில் அடைத்து வைத்துதாக்கியுள்ளனர்.
உழைக்கும் மக்கள் பகுதியில் இளைஞர் அமைப்பைக் கட்டி செயல்படும் புமாஇமு இளைஞர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் இளைஞர்களை , மக்களைத் திரட்டி போர்க்குணமாக போராடிவருகின்றது.
அந்தவகையில் மதுரவாயல் பகுதியிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் உழைக்கும் மக்கள்கோரிக்கைகளுக்காவும் , அப்பகுதியில் போலீசின் அராஜகங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றோம்.
இதனால் போலீசின் கட்டப்பஞ்சாயத்துக்கள் பலதடைபட்டுள்ளன. இதற்கு முன்னர் மதுரவாயலில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மாணவர்கள், இளைஞர்களை கேள்வி கேட்பாரின்றிதாக்கும், பொய்வழக்குகள் போட்டு கைதுசெய்து இழுத்துச்செல்லும் போலீசு தற்போது பு.மா.இ.மு இளைஞர் அமைப்புக் கட்டி வேளை செய்யத் தொடங்கிய பின்னர் அத்தைகைய அராஜக நடவடிக்கைகளை அனாவசியமாக செய்ய முடியவில்லை.
சமீபத்தில் அதே ஏறிக்கரைப் பகுதியில் சென்னை பேக்கர் என்ற நிறுவனத்தின் தெர்மால் ரசாயன தொட்டி பாதுகாப்பு இன்றி திறந்து கிடந்ததால் அதில் அப்பகுதி சிறுவன் ஒருவன் விழுந்து இறந்து விட்டான் .
இதை அந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மூடிமறைக்கப் பார்த்தது போலீசு. இதணை அம்பலப்படுத்தியும், நீதிகேட்டும் ஏறிக்கரை பகுதிமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்திய போது அதற்கு தலைமை தாங்கியது பு.மா.இ.முதான்.
இப்படிப்பட்ட போர்க்குணமான செயல்பாடுகளை பார்ர்த்து வந்த போலீசார் தற்போதைய சம்பவத்திலும் தங்கள் அராஜக செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பியதும் அதைப்பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
இதனால் எல்லாம் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது, போர்க்குணத்தை மழுங்கடிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் போலீசின் இந்த அராஜகங்களையும், பொய்வழக்குகளை எதிர்த்தும்,தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு ரவுடி கும்பலை கைது செய்து சிறையிலடைக்கவும் பு.மா.இ.மு தோழர்கள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து மக்கள் பலத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நன்றி நக்கீரன்