28 மே, 2012

மரங்களாய்...



பாரம்பரிய வீடுகள் 
மறைந்து போக 
தென்னக் கிற்று வீடுகள் 
எரிந்து போக,


ஓட்டு வீடுகள் 
அழிந்து கிடக்க,
மெத்தை வீடுகள் 
இடித்து போக,


அவசர வீடுகள் 
சுற்றுலாவில் முளைக்க
விந்தையான வீடு 
விளக்கம் சொல்ல...


எல்லாம் சரிதான் 
நானும் கொள்ள 
உற்றுப் பார்த்தேன் 
உண்மை தெரிந்தது...


வீடுகள் முளைக்க 
மரங்கள் அழிந்தது
வீடுக்கு வீடு 
வீதியில் இருக்க
அந்த வீடுகளில் 


மரங்களாய் மனிதர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக