27 மே, 2012

தியானம் கொள்க...உன் விழிகள் பார்க்கும் பார்வைக்கும்
உலகமே உன்னுள் இருப்பத்தாக நினைக்கும்
உன்னிடம் தீயவை காதல் கொள்ளும் 
உனக்குள் ஒரு பூகம்பமே நடக்கும்
உண்மையில் இது ஒரு நாடகம்...
உணராமல் நீ போனால் வதைக்கும் 
ஊசிப் போல உன் மனதை குத்தும் 
உன் வினையே உன்னை கொல்லும்
உனக்குள் இருப்பது மன அழுத்தம்...

இதைப் போக்க மனதில்உறுதிவேண்டும் 
உனக்குள் வேண்டும் உன் ஆதிக்கம்
இதை தவிர்க்க  தியானம் கற்றால் புரியும்
தெளியும்,கோபம் மறையும்,காமம் விலகும்...


தனி நிலை காண உன் நிலை மற.
கண் முடி தியானம் தினம் கொள்க!


கண்டபடி எண்ணம் வரும் முதலில்,
கலங்காதே,கரை சேர்வாய் சில நாளில்


ஒரு நிலை கண்டுவிட்டால் உள்ளத்தில் 
புதிய ஜோதி வந்து சேரும் அந்த இடத்தில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக