பேசவேயில்லை பிறந்த இடத்தை
புதைக்கும் வரை...
===================================
கருவறை ஒன்றாய் இருந்தும்
சண்டையிட்டுக்கொண்டனர்
வீடு உனக்கா,எனக்கா...
===================================
பிள்ளைக்கு என்று வாழ்ந்த வாழ்க்கை
இன்னும் தொடர்கிறது
முதியோர் இல்லத்தில்...
=====================================
இடியுடன் கூடிய மழை
இன்னும் சிலமணிநேரத்தில்
வானம் பார்த்த பயிர்கள்...
=======================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக