அம்மா என்றால் உறவுக்கும்
உணர்வுக்கும் அர்த்தம் புரியும்.
மம்மி என்று சொன்னால்
பிணத்தை அல்லவா குறிக்கும்!
நன்றிக் கடன் மறந்த நீயோ
அந்நிய நாட்டின்
ஆங்கில மொழிவுமா கடன்...?
கடன் நடப்பை முறிக்கும்,
அந்நிய மொழியோ உன்
தாய்மொழியை அழிக்கும்...
கற்பது தவறில்லை.
கற்றாலும் தமிழ் மொழியில்
பேசுவதில் தவறில்லை.
மம்மி என்றால் பிணம்,
அம்மா என்றால் பாசம்
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.
மற்ற மொழியும் கற்று கொள்
தமிழை பேசிக்கொள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக