23 ஜன., 2012

உள்ளத்தின் பதில் !



மனமே!
உன்னோடு பேசலாமா?
சில
கேள்விக்கு 
பதில் வேண்டும்.
சொல்வாயா?

சிலசமயம் சோகமும் ,
சிலசமயம் கோபமும்,
சிலசமயம் இன்பமும்
பெறுகிறேன்.

நீ ஒருவன் தான்
உனக்குள் ஏன்
இந்த வேறுபாடு ,
இது என் ஐயப்பாடு?

என் நண்பா
பதில் தரட்டுமா .
சோகம் என்பது
உன்னை சுற்றி
இருப்பதை 
காணும் போதும்...

இறக்கும் போதும்
தொலைத்தப் போதும்
நீ உண்டாக்கிக்கொள்வது!

கோபம் எனபது
உன்னால் முடியாமல்
போகும்போதும்...

உன் தவறை,
சுட்டிக்காட்டும் போதும்,
காதல் கிடைக்காமல்
வாடும் போதும்...

வறுமையை நீ
உணரும் போதும் ,
உன் பேச்சை
கேட்காமல்
நடக்கும்  போது
நீ உருவாக்கிக்கொள்வது.

இன்பம் என்பது
உன் உடல் கொண்டது
உன் கண்கள் சொல்வது
உதவி செய்வதிலும்
உன்னை புகழம்போதும்
உறவுக்கொள்ளும்போதும்
நீ வாங்கிக்கொள்வது.

இதில் எனக்கு
என்ன வேலை!
நான் எங்கே இருக்கிறேன்...

என்னை நீ 
அறியவேண்டுமா...
உனக்குள் நான்
என்பதை போக்கி,
எனக்குள் நீ என
ஆகவேண்டும்...

அமைதி பெரு முதலில்.
தியானம் செய் தினமும்.
மேல உள்ள அனைத்தும்
விலகும்.
விடியல் பிறக்கும்.

என்னை நீ அறிவாய்
என்னை...
உள்ளம் 
என்பது தெளிவு
அறிவு 
என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ 
உணர்ந்து வாழு...!

1 கருத்து:

  1. பெயரில்லா24 ஜன., 2012, 5:57:00 PM

    உள்ளத்தை உணரனும் நல்ல சிந்தனை அண்ணா ...கவிதை சூப்பர்

    பதிலளிநீக்கு