22 ஜன., 2012

போலிச் சாமியார்...




போலிச் சாமியார் இவர்.
சாமி வேடம் போடுவார்.
மறு அவதாராம் என்பார்.
மதிக்கெட்ட சிலபேர்,
கையெடுத்து வணங்குவார்.
சொல்வதை வேதம் 

என்றேக்கொள்வர்...

தாரம் இல்லா வாழ்விதனை 
சுகம் என சொல்வார்.
தனியே தரங்கெட்ட 
உறவுகளுடன் கூடி மகிழ்வார்...

இதை அறியாமலே 
சிலர் இவரை நாடிப்போவார்
நினைப்பது எல்லாம் 
நடக்கணும் 
என வேண்டிக்கொள்வார் 

தனிமனித 
வழிப்பாடுகளை 
கைப்பற்றிக்கொள்வார்...

கீதை
குரான்
பைபிள்
சொல்லாததையா 
சொல்வார்!

எல்லா வேதமும் 
நம் மொழிகளில் இருக்கு
படித்துவிட்டால் 
அறிந்துக்கொண்டால்
புரிந்துக்கொண்டால் 
புத்தி தெளியும் உனக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக