தாவணிகள் எழுதும்
கவிதையே மருதாணி!
இலைகளை மைய அரைத்து,
கைகளில் கோலமிட்டால்,
மணப்பெண்ணின்,
அழகுக்கு .அழகு சேர்க்கும்,
திருமண,பண்டிகை
காலத்திலும்
புடவைக்கும்
தாவணிக்கும்...
மருதாணியே
தனி அழகூட்டும்
மனதை ஈர்க்கும்!
தலை நரைக்கும்,
கால் ஆணிக்கும்
மருந்தாகும்!
தூக்கம்,மறந்த
துக்கத்திற்கும்
பூவையர் போலவே....
மருதாணி பூவும்
தலையணையாய்
மாறினால் தூக்கம் வரும்!
மறுதோன்றி
அழவணம்
ஐவணம்
மெகந்தி என்ற
துணைப் பெயர்கள் கொண்ட,
மருதாணி ஒரு
கிருமி நாசினி,
மறுக்காமல்
நீ வளர்க்க யோசி!
athu எல்லாம் பழைய காலம் மாறி இருக்கு ..கவிதை அருமை அண்ணா
பதிலளிநீக்குநன்றி தங்கையே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
பதிலளிநீக்கு