20 ஜன., 2012

காதல் இலக்கியம்...


வரலாறுகளை 
வாய்க்கு வந்தபடி 
எழுதுவதும் 
பாடுவதும் 
இவ்வுலகத்தில் 
இருக்கு...

பொய்யை 
உண்மையாய் 
உருமாற்றி 
அழகுபடுத்தி 
சொந்தம் 
கொண்டாடுவதும்...

உள்ளதை 
உலகிற்கு 
கற்பனை கலந்து 
கதை விடுவதும் 
கை வந்த கலையாய்
இங்கு...

இதற்கு 
தாஜ்மஹாலும் 
விதி விலக்கா
இல்லை...

இதற்கும் 
கதைகள் பல 
சொந்தம் 
கொண்டாடும்...
உண்மையை
மறைக்க

திசைத் திருப்ப...

இருந்தாலும்
இன்னும்
பேசப்படுகிறது
கட்டிட அழகு
ரசிக்கப்படுகிறது
காலத்தால் அழியாத
அதிசியமாய்...

உறவுக்கும்...
இல்லறத்துக்கு
இணங்கிய
இரு உயிர்களின்
காதல் இலக்கியம்
என்றே...

1 கருத்து:

  1. உண்மை தான் கல்லறையைக் காதல் சின்னம் என்று கருதுவதை தாங்கள் குறிப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு