லேபிள்கள்
- அறிந்துக்கொளவோம்... (10)
- இன்றைய சுழலுக்கு கவிதை (191)
- கட்டுரைகள் (6)
- கவலை மறந்து ரசிக்க (1)
- கவிதைகள் (147)
- கவிதைகள் . (46)
- கவிதைகள் ... (8)
- கவிதைகள். (30)
- சமூகக்கவிதைகள் (159)
- சிரிக்க மட்டும் (183)
- சென்ரியூ-நகைப்பாக்கள். (1)
- தன்னம்பிக்கை கவிதை (41)
- திரைப்படம் ஒரு பார்வை... (11)
- தினசரி செய்திகள்... (184)
- துளிப்பாக்கள் (18)
- நகைசுவை கவிதைகள். (9)
- நினைவுகள் (33)
- பஞ்ச் டயலாக்.. (1)
- படக்கவிதைகள் (111)
- பழமொழிகள்... (2)
- பார்வைகள் (26)
- மருத்துவக் கவிதைகள் . (22)
- வாழ்த்துக்கவிதைகள் (10)
- ஹைக்கூ கவிதைகள் (61)
5 ஏப்., 2010
தலைமுறை பாரீர்!
அன்று
தாய்ப்பால் தந்து
மகிழ்ந்த உலகம்!
இன்றோ...
தாய்க்கே
பாலில்லாத காலம்!
அன்று!
தாய்ப்பாலுக்கு இருந்த
மார்பகம்!
இன்று
அழகுக்கு அறுவை செய்யும்
கோலம்.
இன்று
தாய்ப்பாலுமில்லை,
புட்டிப்பாலுமில்லை.
குடியை கெடுக்கும்
குடிபானம்...!
இது என்ன கலிகாலமா,
வளரும் பிள்ளையும் ஈர்க்கும?
பெற்றோரே!
வாழும் வாழ்கையில் வரும் பிழைகளை,
வடித்து வாழ்ந்தால் ,மதிக்கும் நம் பிள்ளைகள்!
விதைத்த விதைதான் வளரும்
உன் நிலையை நிழலாய் பிள்ளைகள் தொடரும்.
வேண்டுமா ,இல்லை இனி நாடுமா
குடியை கெடுக்கும் குடியை?
நாமே முன் மாதிரி
எல்லாம் கைவிட்டப்படி...
குடி செழிக்க இவன் கைப்பிடி...
பூத்துக்குலுங்கும் தலைமுறை பாரீர்!
இந்த குடிமக்கள்!
குடி, குடியை கெடுக்கும்
என்று சொன்னால்...
உன் குடியா...
என சொல்லி சிரிக்கிறார்கள்!
குடித்தால் குடலும்
கெடும் என சொன்னால்...
அதுக்குதான் குடலும்
சாப்பிடுகிறேன் என சொல்கிறார்கள்!
குடிப்பதே இவர்களது வாடிக்கை
குடித்தபின் செய்வதோ வேடிக்கை!
வாழ்க்கை மறந்த குணங்களை
மாற சொன்னால் மாறுமா ?
பிடிவாதத்தோடு
வாதம் செய்யும் இவர்களுக்கு
பிடி வராண்டு வந்தாலும்
குடிக்கும் மனம் விட்டுதான் விடுமா ?
இருப்பதில் குடிக்கவே குறைவில்லை
குடித்தாலும் போதை போதவில்லை...
இருந்ததும் போக ,வீட்டிலுள்ள பொருகளும்
விற்பனைக்கு தயார் இவர்கள் நிலை.
குடித்து குடல் வெந்து இறக்கும் இவர்களுக்கு
தன் குடி ஒன்று இருப்பதே நினைக்கவில்லை!
குடி குடியை கெடுக்கும் என்றால் மட்டும்
திருந்தி விடவா போகிறார்கள் ?
இந்த குடிமக்கள்!
நட்பு கவிதை!
இவ்வுலம் இறைவன் தந்தது.
இனிமையின் உதயம் நட்பு தருவது.
நீலவானமில்லாத உலகமில்லை
நட்பு என்றும் மனதைவிட்டு மறைவதில்லை!
காலத்தின் ஓடத்தில் பிரிந்து இருந்தாலும்
நினைவுகளில் என்றும் நாம் சங்கமம்!
எனது பலமும் ,பலகினமும் நீ!
எனது வாழ்க்கையின் பகுதி நீ !
இறப்பு வரை நீ இருந்தால் இழப்பில்லை,
இறக்கும் போது நீ இருந்தால் பயமில்லை.
நட்போடு வாழும் வரை மகிழ்வுக்கு பஞ்சமில்லை!
நட்பு அறியா வாழ்க்கையில், வாழ்வது அர்த்தமில்லை!
1 ஏப்., 2010
சொந்த மண்ணிலும்,
சொந்த மண்ணிலும்,
சோகத்தோடு சொந்தம்,
சொந்தம் எல்லாம் தூரம்,
பூமி பொது சொத்து
என சொல்வது உண்டு.
எங்கள் கதை அறிந்தால்,
சொன்னவரை கன்னத்தில்
அடிக்க தூண்டும்.இன்று .
கிரகங்கள் போய்
ஆராய்ச்சி செய்வதை விட்டு
எங்கள் நாட்டைக்
கண்டு, கண்டனம் செய்தால்
நன்மை உண்டு .
வானம் போல எண்ணமுமில்லை
பூமியில் வாழ்க்கையுமில்லை.
இது தானே எங்கள் நிலை!
இன்னும் உணர்வாருமில்லை,
இதை தட்டிக்கேட்க உறவுமில்லை
குடந்தையின் அழகை
குடந்தையின் அழகை
கர்வத்தோடு,நீ சொல்லும்
கவியோடு,அதன் நடையோடு,
கண்டேன்!
கர்வத்தோடு,நீ சொல்லும்
கவியோடு,அதன் நடையோடு,
கண்டேன்!
என்னை நானே மறந்தேன்!
பெரியக் கடை வீதியில்,
நானும் இந்த நேரம் நடைப்
பழகினேன்!என்னை மறந்தேன்!
மூடி இருக்கும் கற்பகம் திரை அரங்கமும்,
உன் கவியால் ..
என் முன்னால் வந்துப் போனது,
தேவி திரை அரங்கமும்,பரணிகாவாக,
மாறினாலும்,உன்னால்
பழையப்பெயரும் நினைவூட்டியது
உன் கவியால் வந்தது .
மல்லிகை மனம் என் மனத்தை,
பதம் பார்க்க,மீண்டும் உன் கவியை,
நான் படிக்க மனதுக்குள் ,ஆனந்தம்.
நான் என்ன சொல்வேன்,உன் கவியால் வந்தது .
மல்லிகை மனம் என் மனத்தை,
பதம் பார்க்க,மீண்டும் உன் கவியை,
நான் படிக்க மனதுக்குள் ,ஆனந்தம்.
என் நினைவுகளை...!
என் மண்ணின் மைந்தன் தந்த
கவிதை,என்னை பழைய,
பழகிய,நாட்களுக்கு ,
அழைத்துப் போனது...
என் மனம் இப்பொழுது
கும்பகோணத்தில் உள்ளது!
எல்லாம் உன் கவிதை தந்தது !
எங்கள் நகரம் கும்பகோணம்!
கோயில்களின் அணிவகுப்பு
எங்கள் நகரத்தின் சிறப்பு!
மகா மகக் குளமும்,
பொற்றாமரைக் குளமும்,
காவேரியுடன் ,வரவேற்கும்.
பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,
இணைந்து,அழகு சேர்க்கும் !
வெற்றிலைக்கு,
பெயர் பெற்ற நகரம்.
சிற்பத்தோடு,சிகரமிட்டு,
உலகம் முழுதும் புகழ் பாடும்.
வியாபாரச் சந்தையில்
முன்னின்று வழி நடத்தும்,
குடந்தை என செல்லமாய்
அழைக்கப்படும் எங்கள் நகரம்...
தஞ்சையில் ஒரு அங்கம்.
இந்த கும்பகோணம்!
உண்மையில் சமத்துவபுரம்.
ஜாதி,மதம்,மொழிகள்
கடந்து ஒளிவீசும்,
புது வழிக்காட்டும்.
பட்டுக்கும் பெருமைச் சேர்க்கும்
எங்கள் நகரம் கும்பகோணம்
சிற்பத்தோடு,சிகரமிட்டு,
உலகம் முழுதும் புகழ் பாடும்.
வியாபாரச் சந்தையில்
முன்னின்று வழி நடத்தும்,
குடந்தை என செல்லமாய்
அழைக்கப்படும் எங்கள் நகரம்...
தஞ்சையில் ஒரு அங்கம்.
இந்த கும்பகோணம்!
உண்மையில் சமத்துவபுரம்.
ஜாதி,மதம்,மொழிகள்
கடந்து ஒளிவீசும்,
புது வழிக்காட்டும்.
பட்டுக்கும் பெருமைச் சேர்க்கும்
எங்கள் நகரம் கும்பகோணம்
என்று சொன்னால் ஆனந்தம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)