சோற்றுக் கற்றாழை
இது ஒரு
மருத்தவ நிவாரணி...
இலைச்சாறுகளில்
ஆந்த்ரோகுயினோன்கள்இ
ரெசின்கள் பாலிசக்கரைடு
மற்றும்...
ஆலோக்டின்பி’ எனும்
பல வேதிப்பொருட்கள் உள்ளன.
பெண்களுக்கு என்றும் ராணியாய்,
வரம் தரும்
அடுக்கு மடல் கொண்ட செடி.
இது ஒருவகை இனிப்பு கூழ்,
இது மூல நோய்க்கும்,
வயிறுப் புண்ணுக்கும்
இலையின் சாறு மருந்தாகும்.
அழகுக்கு
அழகுச் சேர்க்கும்.
சோற்றுக் கற்றாழை
தாயகம்
தென்னாப்பிரிக்கா
மற்றும் அரேபிய நாடாகும்...
இதை நாடாமால் போனால்
அரியசெடியை இழந்த நிலையாகும்.
இதன் மருத்துவ குணம்
அறிந்தும்
இன்னும் நாம் வீட்டில்
பயிரிட மறுத்ததால்,
இனியும் இல்லாமல் போனால்
நமது இயலாமையைக் குறிக்கும்...
வரும் தலைமுறை சபிக்கும்
இளமைக்கு
இது தேவை என்றால்
இன்னுமா தயக்கம்...
பயிரிட ஏனப்பா சுனக்கம்?
இதன் மருத்துவம்
பயன் தரும்.
இளமை தரும்
சோற்றுக் கற்றாழை,
நமக்கு என்றும் சொந்தம்