20 பிப்., 2012

பச்சை நிற இலைகள்...



பச்சை நிற இலைகள்,
மஞ்சள் பூவுக்கு,

உறவானது!


மஞ்சள் பூவை ரசிக்கும்,
மனதுக்கு
பச்சை நிறம்
அன்னியனானது!

மஞ்சள் பூவை ரசிக்கும்
ஆசாமிக்கு
பச்சை இலை,
வெற்று இலையானது
எதிரியானது!

குளத்தோடு
அதன் குலத்தோடு
இருந்தாலும்
பச்சை இலை
இடைஞ்சலானது.
இன்முகம் மறைகிறது
இன்னமும் தொடருகிறது...

இதன் எதிரொலி!
வளரும் நிலை அறிந்து
தடுப்புக்கள்  கொடுத்து,
பச்சை இலை அழிப்புக்கள்!

பச்சை இலைகளை
அழித்தாலும்,
எரித்தாலும் எருவாகும்,
மீண்டும் உறவாக
உருவாகும்!

3 கருத்துகள்:

  1. பெயரில்லா20 பிப்., 2012, 6:07:00 PM

    Liebster Blog Award தங்கள் தளத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது, இதனை ஏற்று தாங்கள் விரும்பும் ஐந்து வலைப்பூ நண்பர்களுக்கு அளித்து கவுரவிக்கவும் தோழரே!

    பதிலளிநீக்கு
  2. பச்சை இலைகளை
    அழித்தாலும்,
    எரித்தாலும் எருவாகும்,
    மீண்டும் உறவாக
    உருவாகும்!........


    ......... உருவகம் அருமை

    பதிலளிநீக்கு