பசுமை பேசிய
பச்சை மரங்களும்
புல் வழிச்சாலைகளும்
மழையோடு மாறுப்பட்டதால்
காய்ந்துப்போன சருகளாய்
பட்ட மரங்களாய்...
எல்லாம் வாழ்க்கையோடு
தன் ரசனையோடு
ஒன்றுபட்டால்
உறவாகவும்...
மாறுப்பட்டால்
மறுக்கப்படுவதும்...
இயற்கைக்கு மட்டுமா...
முதியோர் இல்லம்
தோன்றுவதற்கும்
மாறுப்பட்ட
மறுக்கப்பட்ட
நிலையே காரணம்!
மரத்தை போல
வாழுகின்ற
மனிதர்களால்...
பட்ட மரங்களாய்
காயம்பட்ட உள்ளங்களாய்
இன்னும் இங்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக