13 ஆக., 2013

முத்தமிடதானா...?




பனியும்
மழையும் 
கரைந்து நதியாய் 
உருமாறி 
கடலை முத்தமிடதானா...?

8 ஆக., 2013

அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...



பசி வந்தால் அனைத்தும் 
பறந்து போகும் இது பழமொழி 

ரமலான் வந்தால் 
ரஹ்மான் அருளால்
பசியே பறந்து போகும் 
இது நபி வழி...

கறையை போக்க 
பிறை சொன்னது நோம்பினை 
நோற்று அறிந்தோம் 
அதன் மாண்பினை...

ஏகன் அருளிய மறையை 
அதன் கிருபையை அறிந்தோம்
நன்றி சொல்லவே 
பசியை மறந்தோம்...

புத்தாடை உடுத்தி 
உள்ளதில் கொடுத்து 
உள்ளம் மகிழ்ந்து...

பிறை கண்டு நோற்றோம் 
பிறை கண்டே பெருநாளை 
ஏற்றோம்...

இருக்கும் காலம் வரை
இருப்பதில் கொடுத்து வாழு 
இறைவனை மட்டும் வணங்கு....

அனைவருக்கும் எனது 
ரமலான் பெருநாள் நல் 
வாழ்த்துக்கள்...

1 ஆக., 2013

தாங்க்ஸ் வருகை....




தாங்க்ஸ்  வருகை 

ஒதுக்கப்பட்டது 
நன்றி...


================

நன்றி மறந்த கூட்டம் 
கொக்கரித்தது 
தாங்க்ஸ்...

=================
கலாச்சார தொற்று 
அரை குறை ஆடை 
மொழி...!
==================


படிப்பே அறியாதவனும் 
சொல்லுகிறான் 
தாங்க்ஸ்...!
======================

வண்டுகளின் மோதலில்...

வண்டுகளின் மோதலில் 
உதிர்ந்து போனது 
இலைகள்...

சுகம் கண்ட 
மலரும் களங்கவில்லை 
உதிர்ந்த இலையை கண்டு...

=================
வண்ணத்தில் பிறந்து 
காற்றில் தவழ்ந்து 
சிரிக்கும் அழகுக்கு 
மலர் யென்று பெயர் 
மனதை ஈர்க்கும் 
அதிசியத்தின் உருவதுக்கு 
மலர் யென்று பெயர்....


பந்தமாய்...

மலர்கள் திருமண பந்ததுக்கும் 

மரணத்துக்கும் பந்தமாய்...

ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில் 
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய் 

வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும் 
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது 

நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள் 
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும் 

நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய் 
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும் 

மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை 
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...

இணக்கமாய் மலர்...

பூக்களில் ஆனவமில்லை 
பூக்க மறுத்த செடிகளுமில்லை...
மனிதா அறிந்துக்கொள் 
பூக்களை பார்த்து புரிந்துக்கொள்...


மனமும் மணமும் 
மயக்கும் குணமும் 
ஒன்றாய் மலருக்கு...


இரவுக்கும் 
இறப்புக்கும் 
இணக்கமாய் மலர்...


உதிரிய மலர் எருவாய்
உருமாறும் 
வண்டுக்கு கொடுத்து 
தேனாய் இனிக்கும்...



வருடங்கள் உனக்கு வரலாறு 
சொல்லும் 
பூக்களோ இருக்கும் வரை 
அழகை சொல்லும் 
இல்லறத்தை வளர்க்கும் 
இருக்கும் 
இடத்தை அலங்கரிக்கும்...